Thalapathy Vijay, Master, Kutti Story: நடிகை வேதிகா தமிழில் ’காவிய தலைவன்’, ’பரதேசி’, ’முனி’ போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அதோடு தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கூடவே சமீபத்தில் ஜீத்து ஜோசப்பின் ’தி பாடி’ என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
‘வம்சம்’ பூமிகாவா இது? நிஜத்துல படு ஸ்டைலிஷா இருக்காங்களே…
#KuttyStory #AlwaysBeHappy ???? @actorvijay #TikTok pic.twitter.com/LK1XJ6BG99
— Vedhika (@Vedhika4u) May 24, 2020
இந்த பூட்டுதல் கால கட்டத்தில், தனது ஈர்க்கக்கூடிய நடன திறமையால் இணையத்தில் இன்னும் பிரபலமாகியிருக்கிறார் வேதிகா. சமூக ஊடகங்களில் தொடர்ந்து தனது நடன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த வாரம் வைரலான ஒரு ஹாட்டான டான்ஸ் வீடியோவுக்குப் பிறகு, இப்போது அவர் டிக் டாக்கில் இன்னுமொரு வைரல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தளபதி விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தில், அனிருத் இசையில் இடம்பெற்றிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் தான் அது. இந்த க்யூட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.இந்த க்யூட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.
குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை – சிறப்பு புகைப்படங்கள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர், படத்தில் விஜய்யுடன் இணைந்து, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெரேமியா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் வேதிகா வினோதன் போன்ற சில திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், விரைவில் ஒரு வலைத் தொடர் மூலம் தனது டிஜிட்டல் அவதாரத்தையும் ஆரம்பிக்க உள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”