மேடையில் காடுவெட்டி குரு, வீரப்பன் படம்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ரியாக்ஷன்

எனது கணவர் வீரப்பன் தமிழ் தேசியவாதியாக கர்நாடகத்தில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர்- வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

Tamil Cinema
Maaveeran Pillai Movie

கேஎன்ஆர் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாவீரன் பிள்ளை. சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கேஎன்ஆர் ராஜா, இயக்குநர் பேரரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீரப்பன் மகள் விஜயலட்சுமி பேசும்போது, சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்குள் இருந்தது. என்னுடைய தந்தை தனி மனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன், என்றார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, ‘ எனது கணவர் வீரப்பன் தமிழ் தேசியவாதியாக கர்நாடகத்தில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர்., அவர் எப்போதும் சாதிக்கு துணை போகாதவர்.

கர்நாடக வனத்துறையினர் தற்போது தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். எனது கணவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா. அரசியல் அதிகாரம் படைத்தவர்களுக்கு இந்த சட்டம் பாய்வதில்லை. வீரப்பன் போல் ஒருவர் தேவை என்பதே தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர்.

ஆனால் அன்று வீரப்பன் தேசத்துரோகி என்று அவரை விஷம் வைத்து இந்த அரசு கொலை செய்தது. அவரை சுட்டுக்கொன்றதாக காவல்துறை பொய் சொல்லி வருகிறது’ எனவும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Veerapan wife muthulakshmi kaduvetti guru maaveeran pillai movie

Exit mobile version