Advertisment

’ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கையில் முக்கியமானவர்’: இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம்

மலையாள சினிமாவில் என்றும் மனதில் நிற்கும் பல ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார், அர்ஜூனன் மாஸ்டர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Arjunan Master

MK Arjunan Master

முக்கிய இசைக்கலைஞர் எம்.கே.அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 87. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கீ போர்டில் வாய்ப்பளித்தவர் இவர் தான்.

Advertisment

கைகளை தட்டுவதாலோ விளக்குகளை ஏற்றுவதலோ கொரோனா ஒழியாது – புதுவை முதல்வர்

2017 ஆம் ஆண்டு இவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து உடனடியாக திரும்பினார் ரஹ்மான். இந்த மூத்த இசை இயக்குனர் வயது மூப்பு தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டு வந்தார். 1968 ஆம் ஆண்டில் இசையமைப்பாளராக "கருதபவர்ணாமி" திரைப்படத்தில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், நாடகத்தைத் தவிர 500 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.

மலையாளத் திரையுலகில் மிகச் சிறந்த இசையமைப்பாளர்-பாடலாசிரியர் கூட்டணியில் அர்ஜூனர் - ஸ்ரீகுமரன் தம்பி கூட்டணி முக்கியமானது. இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட 50 படங்களில் ஒன்றாக வேலை செய்திருக்கிறது.

மலையாள சினிமாவில் என்றும் மனதில் நிற்கும் பல ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார், அர்ஜூனன் மாஸ்டர். இப்போதும் அவர் பாடல்கள் மனதை மயக்குவதாக இருக்கும் என்கிறார்கள். கேரளாவில் பிறந்த இவர், பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா என்ற விடுதியில் வளர்ந்தார். அங்கு ஆர்மோனியம் வாசிக்கவும் இசையையும் கற்று தேர்ச்சிப் பெற்றார்.

14 நாட்கள் தென்காசியில் தங்கியிருந்த டெல்லி மாநாடு பங்கேற்பாளர்கள்: மலேசியா புறப்பட்டபோது பிடிபட்டனர்

”சிறந்த இசைக்கலைஞரின் மறைவு இசைத் துறைக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். எம்.கே.அர்ஜூனனின் இறுதி சடங்குகள் இன்று மாலை கொச்சியில் நடைபெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

A R Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment