Advertisment

நயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்!

Nayanthara - Vignesh Shivan: விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இவர்கள் ஜோடியாக வலம் வந்து கேமரா கண்களுக்கு விருந்து படைத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara Vignesh Shivan

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

'போடா போடி’, ’நானும் ரவுடி தான்’, ’தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் டைரக்டர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தில் நடித்த பிறகு அவருடன் காதலில் விழுந்தார் நடிகை நயன்தாரா.

Advertisment

நயன்தாராவிற்கு இந்தாண்டிலேயே திருமணம்!!! யாருடனா…?

விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இவர்கள் ஜோடியாக வலம் வந்து கேமரா கண்களுக்கு விருந்து படைத்தனர். அதோடு தங்களின் மற்ற ஃபோட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று, அங்கு எடுத்துக் கொண்ட படங்களை இணையத்தில் வெளியிடுவார்கள். பெரும்பாலான ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவார் விக்கி.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் நயன்தாராவின் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் அவர்கள் சமீபத்தில் சென்ற சாண்டோரினி ட்ரிப்பில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். முகத்தை மறைத்துக் கொண்டு கைகளுக்குள் சூரியன் தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

படத்தைப் பதிவிட்டிருக்கும் விக்னேஷ், “அழகியசூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டது” என கேப்ஷன் வேறு கொடுத்திருக்கிறார். தற்போது இந்தப் படம் விக்கி - நயன் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tamil Cinema Nayanthara Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment