scorecardresearch

நயன்தாரா- விக்கி திருமணம்: ஸ்டாலின்- உதயநிதியை நேரில் சந்தித்து அழைப்பு

ஜூன் 8 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா- விக்கி திருமணம்: ஸ்டாலின்- உதயநிதியை நேரில் சந்தித்து அழைப்பு

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது

இந்நிலையில், இருவரும் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொள்கின்றனர். முதலில் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில், அது மகாபலிபுரத்தில் மாற்றி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரிடம் திருமணத்திற்கான அழைப்பிதழை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வழங்கினர். அப்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் அவர்களுடன் உடனிருந்தார்.தற்போது இந்த புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மிக முக்கியமான பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய், அஜித் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் திருமண வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. 

மேலும், இவர்களது திருமண நிகழ்வின் வீடியோ உரிமையை ஒரு பிரபல ஓடிடி வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vignesh shivan nayanthara meet mk stalin invite for wedding