Advertisment

‘லட்சுமி’ : விஜய் - பிரபுதேவா படத்தின் டைட்டில் இதுதான்...

இந்தப் படத்துக்கு, ‘லட்சுமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் ‘லட்சுமி’ குறும்படம் டிரெண்டிங்காக இருந்தது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
prabhu deva and aishwarya rajesh

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படத்துக்கு ‘லட்சுமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ படத்தை இயக்கியுள்ளார் விஜய். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், அபார்ஷனை மையமாகக் கொண்டு த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

‘கரு’ படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீஸுக்குத் தயாராக வைத்திருக்கும் விஜய், தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார். ‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மறுபடியும் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். நடனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துக்கும் சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு, ‘லட்சுமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் ‘லட்சுமி’ குறும்படம் டிரெண்டிங்காக இருந்தது. இதனால், இந்தப் படத்துக்கு இந்தப் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளனர். அத்துடன், ஏற்கெனவே விஜய் - பிரபுதேவா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘தேவி’ படத்தின் பெயர் பெண்ணாக இருப்பதால், இந்தப் படத்துக்கும் பெண் பெயரையே தலைப்பாக வைத்துள்ளனர்.

Tamil Cinema Aishwarya Rajesh Prabhu Deva Lakshmi Movie Sam Cs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment