‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறையுள்ள இளம் நடிகராகவே அவர் படத்தில் நடிக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில், விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி, நாட்டில் நடக்கும் தவறுகளைத் தனிமனிதனாக நின்று போராடி வருபவர். குறிப்பாக, சாலையோரங்களில் வைக்கப்படும் ஃபிளக்ஸ் பேனர்களை எதிர்த்து வழக்கு தொடர்வதோடு, நேரடியாக அந்த இடத்திற்கே சென்று அவற்றைக் கிழிக்கவும் செய்வார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை கருவாகக் கொண்டு, சில மாற்றங்களோடு உருவாகி வரும் படம்தான் ‘டிராஃபிக் ராமசாமி’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். ஹீரோவாக ஆர்.கே.சுரேஷும், ஹீரோயினாக உபாஷனாவும் நடிக்கின்றனர்.

நகைச்சுவையான நீதிபதி வேடத்தில் அம்பிகா நடிக்கிறார். மேலும், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சேத்தன், மோகன்ராம், மதன்பாப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவி இயக்குநரான விஜய் விக்ரம், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘ஹர ஹர மஹாதேவஹி’ படத்துக்கு இசையமைத்த பாலமுரளி பாலு, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறையுள்ள இளம் நடிகராகவே அவர் படத்தில் நடிக்கிறார்.

×Close
×Close