Advertisment

விஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது? : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை

Parasite as a copy of Minsara kanna Tamil movie : ஆஸ்கார் விருது வென்ற முதல் கொரிய படம் என்ற பெருமை பெற்ற பாரசைட் படம், 1999ம் ஆண்டில் விஜய், ரம்பா நடிப்பில் வெளியான "மின்சார கண்ணா" படத்தின் காப்பி என்ற தகவல், சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay, rambha, kushboo, k s ravikumar, minsara kanna, joaquin phoenix, khushboo, vijay, Oscars 2020, Academy awards, parasite, Bong Joon Ho, copy, netizens

vijay, rambha, kushboo, k s ravikumar, minsara kanna, joaquin phoenix, khushboo, vijay, Oscars 2020, Academy awards, parasite, Bong Joon Ho, copy, netizens, social networks

Minsara kanna movie - Parasite movie : ஆஸ்கார் விருது வென்ற முதல் கொரிய படம் என்ற பெருமை பெற்ற பாரசைட் படம், 1999ம் ஆண்டில் விஜய், ரம்பா நடிப்பில் வெளியான "மின்சார கண்ணா" படத்தின் காப்பி என்ற தகவல், சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் கடந்த 10ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஜோக்கர் படத்தில் நடித்த Joaquin Phoenix க்கு சிறந்த நடிகர் விருது. சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்கான விருது, Bong Joon Ho இயக்கத்தில் உருவான பாரசைட் படத்துக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம், ஆஸ்கார் விருது வென்ற முதல் கொரிய படம் என்ற பெருமையை பாரசைட் படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய், குஷ்பூ, ரம்பா நடிப்பில் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான படத்தின் காப்பியே, இந்த பாரசைட் படம் என்ற தகவல், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மின்சார கண்ணா படத்தின் கதை : பணக்கார இளைஞன், தான் கொண்ட காதலின் காரணமாக, கோடீஸ்வர காதலியின் குடும்பத்தில், தனது குடும்ப உறுப்பினர்களை வேலைக்கு சேர்த்து, தனது காதலில் வெற்றி பெறுவதே...

பாரசைட் படத்தின் கதை : ஏழை பாமரன் ஒருவன் செல்வந்தரின் குடும்பத்தில் பணிக்கு அமர்த்தப்படுகிறான். அவனுடைய பொருளாதார நிலைமை சரியில்லாததன் காரணத்தினால், தன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரை, அந்த வீட்டில் ஒவ்வொரு வேலைக்கும் பணியமர்த்த திட்டமிட்டு அதில் வெற்றியும் பெறுகிறான்.

ஏழை - பணக்காரர் இடையேயான தொடர்பை இயல்பாகவும் அதேநேரத்தில் அழுத்தமாகவும் கதாபாத்திரங்கள் வழியே சொல்ல முயன்று அதில் இயக்குனர் Bong Joon Ho பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இதுதொடர்பாக, நமது நெட்டிசன்கள், சமூகவலைளதங்களில் உதித்துள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு...

நான் விஜய் ரசிகன் தான், ஆனால், மின்சார கண்ணா படத்திற்கும், பாரசைட் படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பது உண்மைதான். அதற்காக, அதைவைத்து அந்த படத்தின் காப்பி என்று சொல்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். கரு மட்டுமென்றால் ஒன்றாக இருக்கலாம். ஆனால் கதைக்களம் முற்றிலும் மாறுபட்டது. நண்பர்களே, இந்த சின்ன விஷயத்தை கோர்த்து ஆஸ்கார் விருது பெற்ற படத்தை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Actor Vijay Oscar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment