நடிகர் விஜய்யின் பெற்றோர், ரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் வீட்டில் சமையல் செய்து அசத்திய போட்டோஸ், வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை?
தளபதியாரின் தாய் தந்தை தளபதி ரசிகரின் இல்லத்தில்..#ThalapathyVijay #MasterHasArrived #Master pic.twitter.com/oPuqd85u3V
— Thanjavur District Head (VMI)???????? (@TNJ_VMI) January 20, 2020
தளபதி விஜய், முன்னர் தனது ரசிகர்களின் வீடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்துகொண்டு வந்ததால், மற்ற நடிகர்களை காட்டிலும், நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள் கூட்டமும் அதிகம். ரசிகர்களை மதிக்கத்தெரிந்தவர் என்ற நல்ல அபிப்பிராயமும் அவர் மேல் உண்டு. சமீபகாலமாக, அவரை , அவர் படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும்அதிர்ச்சியாக இருந்து வந்தது.
#ShobaAmma♥????@actorvijay pic.twitter.com/Vlg5m5UzN1
— ஒட்டன்சத்திரம் தளபதி சிவா (@fearless_shiva) January 20, 2020
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் பெற்றோர்களான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர், ரசிகரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளனர். அவர்கள் ரசிகரின் வீட்டிற்கு சென்றதோடு மட்டுமல்லாது, ஷோபா, தன் கையால் ரசிகரின் குடும்பத்தினருக்கு சமையல் செய்தும் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
“ஐ ஆம் வெயிட்டிங்” என அடுத்து எந்த ரசிகர் காத்திருக்கப்போறாரோ!!!