Advertisment

என்னது... விஜய் சேதுபதி 80 டேக் எடுத்தாரா!?!? அப்படி என்ன சீன் அது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Sethupathi super deluxe, விஜய் சேதுபதி

Vijay Sethupathi super deluxe, விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் படத்தில் முதல் காட்சியில் நடிக்க விஜய் சேதுபதி 80 டேக் வாங்கியதும் ரம்யா கிருஷ்ணன் 37 டேக் எடுத்ததும் வெளியாகியுள்ள தகவல் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.

Advertisment

ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதி எடுத்த 80 டேக்ஸ்

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வருகிற 29ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் பற்றி கருத்து தெரிவித்த ரம்யா கிருஷ்ணன் “என்னை தியாகராஜா குமாரராஜா சந்தித்த போது என்னுடைய முதல் காட்சி சிறப்பாக இருக்க வேண்டும்” என அவரிடம் கூறினேன். அவரும் முயற்சி செய்வோம் எனக்கூறினார். ஆனால், முதல் காட்சியில் 37 டேக் வாங்கினேன். என் சினிமா வாழ்க்கையில் இதற்கு முன் நான் இத்தனை டேக்குகள் வாங்கியதே இல்லை. இதன் பின்பும் வாங்குவேனா தெரியாது.

விஜய் சேதுபதி முதல் காட்சிக்காக 80 டேக்குகள் வாங்கியதாக தெரிவித்தார். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நான் நடிக்க தொடங்கிய பிறகுதான் அது புரிந்தது” என தெரிவித்தார்.

இந்த தகவல் வெளியான நொடியில் இருந்தே ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ரம்யா கிருஷ்ணனும் விஜய் சேதுபதியும் முன்னணி நடிகர்கள் ஆனால் அவர்களுக்கே இத்தனை டேக்குகள் தேவைப்பட்டிருக்கிறது என்றால், அப்படி என்ன சீன் அது என்று பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Tamil Cinema Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment