விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜே ரம்யாவின், சங்கத்தலைவன் படத்தின் புகைப்படத்தை ரசிகர்கள்சமூக ஊடங்களில் பாராட்டி வருகின்றனர் .
விஜே ரம்யா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார், கிராமத்து கெட்டப்பில் க்யூட்டாக இருக்கிறார் என்று அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் கம்மெண்ட்ஸ்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, விஜே ரம்யா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்,“சங்கத் தலைவன், திரையுலகில் எனக்கு முதல் திரைப்படமாக அமைந்த படம். வரும் வெள்ளிக்கிழமை வெளிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
விஜே ரம்யா, அமலா பால் நடித்த ஆடை திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனனின் தோழியாக நடித்து கவனத்தைப் பெற்றார். அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து, சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
உதயம் NH4 படத்தை இயக்கிய மணிமாறன் சங்கத்தலைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, வி.ஜே.ரம்யா, கருணாஸ், சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சங்கத்தலைவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“