பிரியங்கா மேல் கோபப்பட்ட அறந்தாங்கி நிஷா : இதுக்கு காரணம் யார் தெரியுமா?

Vijay TV aranthangi nisha gets angry at priyanka on stage reason here: விருது வழங்கும் மேடையில் தொகுப்பாளர் பிரியங்கா மீது கோபப்பட்ட விஜய் டிவி அறந்தாங்கி நிஷா காரணம் என்ன?

விருது வழங்கும் மேடையில் தொகுப்பாளர் பிரியங்கா மீது கோபப்பட்ட விஜய் டிவி அறந்தாங்கி நிஷா காரணம் என்ன?

சமீபத்தில் பிஹைன்வுட்ஸ் கோல்டு ஐகான் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் முன்னனி தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் சின்னத்திரையில் சிறந்த காமெடி நடிகைக்கான விருது அறந்தாங்கி நிஷாவுக்கு வழங்கப்பட்டது.

நிஷா கலக்கபோவது யாரு சீசன் 5ல் கலந்துக் கொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர். பின்னர் விஜய் டிவியின் பெரும்பாலான காமெடி நிகழ்ச்சிகளும் நடித்து வந்தார். நிஷா கோலமாவு கோகிலா, கலகலப்பு 2, மாரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் இவரது சிறப்பான காமெடி திறமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. விருது கிடைத்ததற்கு விஜய் டிவி தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிஷாவுக்கு விருதை ராமர் வழங்கினார். அடுத்ததாக, பிரியங்கா நிஷாவின் கணவர் ரியாஸை மேடைக்கு அழைத்தார். ரியாஸ் நிஷாவோடு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானார். நிகழ்ச்சியில் அவருக்கு வழங்கப்பட்ட தூக்குதுரை என்ற பெயர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மேடை ஏறிய ரியாஸிடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என பிரியங்கா சொன்னதும் நிஷா கோபப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் நிஷா இருந்தபோது தான் சுதந்திரமாக இருந்ததாக ரியாஸ் கூறினார். அப்போது பிரியங்கா, நிஷா மற்றும் ரியாஸின் ரொமான்ஸை பார்க்க விரும்புவதாக கூற, நிஷா ரொமான்ஸ் செய்ய தயாரானார். ஆனால் ரியாஸோ, பிரியங்காவைப் பார்த்து ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் கடுப்பான நிஷா, பிரியங்கா மீது கோபப்பட்டார்.

மேலும், ரியாஸ் பிரியங்காவிடம் சென்று “ஐ லவ் யூ” என்றும் சொன்னார். இதைக் கேட்ட நிஷா, ரியாஸின் சட்டையைப் பிடித்து அவரை அடிக்கப்போனார். அதன்பின் பிரியங்காவிடம் அவர் ஐ லவ் யூ சொன்ன நீயும் ஓகேனு சொல்வியா என கோபமாக கேட்க, அதற்கு பிரியங்கா அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா?, என நிஷா பிக் பாஸில் சொல்லி ட்ரோல்களை வாங்கிய டயலாக்கை சொல்லவும், நிஷா என்ன விடுங்க என ஓடிவிட்டார்.

பின்னர் நிஷா ரியாஸ்க்கு ஐ லவ் யூ சொல்லி, ‘காட்டு பயலே’ பாடலுக்கு நடனமாடினார். அப்போதும் பிரியங்கா ரியாஸிடம் வந்து, கூட டான்ஸ் ஆடுமாறு கேட்க, அவரும் பிரியங்காவோடு நடனமாடினார். இந்த நிகழ்வு, நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv aranthangi nisha gets angry at priyanka reason here

Next Story
பவித்ரா லட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த புகழ் : என்ன கிப்ட் கொடுத்தார் தெரியுமா?Cooku with comali pavithra lakshmi Tamil News: pugazh gives surprises to pavithra lakshmi on her birthday
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com