Advertisment

பாரதி தலையில் கை வைத்து சவுந்தர்யா சத்தியம்... கண்ணம்மா கதி?

Vijay TV BarathiKannamma new promo soundarya on difficult situation: டைவர்ஸ் கிடைக்கலனா செத்துருவேன் என மிரட்டும் பாரதி; டைவர்ஸ் வாங்கினா ஹேமாவ பிரிச்சிடுவேன் என மிரட்டும் கண்ணம்மா; பாரதி கண்ணம்மா ப்ரோமோ

author-image
WebDesk
New Update
பாரதி தலையில் கை வைத்து சவுந்தர்யா சத்தியம்... கண்ணம்மா கதி?

பாரதி டைவர்ஸ் வாங்கினா, ஹேமாவ கூட்டிட்டு போயிடுவேன் என சௌந்தர்யாவிடம் கண்ணம்மா மிரட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலே தற்போது டாப் இருக்கும் சீரியல் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தான். அதிரடி திருப்பங்கள் நிறைந்த கதையமைப்பு தமிழ் குடும்பங்களை இந்த சீரியல் ஒளிப்பரப்பு நேரத்திற்கு கட்டிபோட்டுள்ளது என்று சொல்லலாம். இந்த நிலையில் சீரியலின் புதிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அதில், நான் கண்ணம்மாவுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கேன் என பாரதி சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது. பின்னர் கண்ணம்மா வந்து அழுது கெஞ்சினாலும் அவளுக்கு உதவி செய்யாதீங்க என கண்ணீர் மல்க கேட்கிறான் பாரதி. ஹேமா என்னை விட்டு பிரிஞ்சு போயிடுவாளோனு பயமா இருக்கு என அழுகிறான். இந்த டைவர்ஸ் நடக்க விடமா நீங்க யாராவது ஏதாச்சும் பண்ணா என்னை உயிரோடவே பார்க்க முடியாது என மிரட்டும் பாரதி, சௌந்தர்யாவை தன் தலைமீது கை வைத்து சத்தியம் செய்ய சொல்கிறான்.

அடுத்ததாக கண்ணம்மா வந்து டைவர்ஸ் கொடுக்க சம்மதிக்க மாட்டேன் என சொல்கிறாள். மேலும், இவ்வளவு நாளா இல்லாம இப்ப எதுக்கு அனுப்பிருக்காரு, அவரு மட்டும் விவாகரத்து வாங்குனா, ஹேமாவ அவர்கிட்டயோ இந்த வீட்டிலேயோ விட மாட்டேன் என உறுதியாக சொல்கிறாள்.

இப்படி கண்ணம்மாவும் பாரதியும் மாறி மாறி தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, சௌந்தர்யா என்ன செய்யப்போகிறார்? இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போகிறார்? என தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment