Advertisment

பாரதி கண்ணம்மா ஷாக்... முக்கிய நடிகர் வெளியேறுகிறாரா?

Vijay TV Barathikannamma serial actor quits: விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய நடிகர் விலகலா? நடிகை வெளியிட்ட முக்கிய தகவல்

author-image
WebDesk
New Update
பாரதி கண்ணம்மா ஷாக்... முக்கிய நடிகர் வெளியேறுகிறாரா?

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மற்ற சீரியல்களான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போலவே இந்த சீரியல் எல்லோராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக அருணும், கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்து வருகின்றனர். வில்லி வெண்பாவாக ஃபரினா நடித்து வருகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களான அஞ்சலி கேரக்டரில் ஸ்வீட்டியும், அகிலன் கேரக்டரில் அகிலும் நடித்து வருகின்றனர்.

வில்லி வெண்பாவாக நடிக்கும் ஃபரினா, கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வெண்பாவாக நான் தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அஞ்சலியாக நடிக்கும் ஸ்வீட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சீரியலில் கணவனாக நடிக்கும் அகிலனை டாக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் இது போன்ற எடிட்டை இனி மிஸ் செய்வோம். என்று பதிவிட்டுள்ளார்.

publive-image

இந்த பதிவால் அகில் அல்லது ஸ்வீட்டி இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக பேச்சு எழுந்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment