Advertisment

Vijay TV Serial; லட்சுமியோட அம்மா, அப்பா யாருனு எனக்கு தெரிஞ்சாகனும்… பாரதி அதிரடி

Vijay TV barathikannamma serial today episode barathi knows truth: லட்சுமியோட அப்பா, அம்மா வர்ற வரைக்கும் அவளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லும் பாரதி, உண்மை தெரிந்து விட்டதாக பதற்றப்படும் கண்ணம்மா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; லட்சுமியோட அம்மா, அப்பா யாருனு எனக்கு தெரிஞ்சாகனும்… பாரதி அதிரடி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

லட்சுமி அம்மா யாருனு நான் தெரிஞ்சுக்க ஆசைப்படுவதாக கூற எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். அவங்க அம்மா, அப்பா வெளியூர் போயிருக்காங்க, அதனால் சமையல் அம்மா வீட்டுல விட்டுட்டு போயிருக்காங்க, நீ சமையல் அம்மாவுக்கு போன் பண்ணு என்று சொல்கிறாள் சௌந்தர்யா. எல்லோரும், எப்படி இப்படி நடிக்கிறிங்க என மனதுக்குள் நினைக்கிறான் பாரதி. அப்போது வேணு, அகிலனிடம்  லட்சுமியை சமையல் அம்மா வீட்டில் விட்டு வர சொல்ல, லட்சுமிக்கு உடம்பு சரியில்ல, சமையல் அம்மா வீட்ல விட, அந்த சமையல் அம்மா என்ன டாக்டரா? என தடுக்கிறான் பாரதி. இருந்தாலும், லட்சுமி சமையல் அம்மா வீட்டுல தானே இருந்த, அங்க கொண்டு போய் விடுறதுதானே சரி, நீ ஏன் கூட்டிட்டு வந்த என சௌந்தர்யா கேட்க, நான் ஒன்னும் லட்சுமியை கடத்திக்கிட்டு வரல, நான் டாக்டர், லட்சுமியோட அப்பா அம்மா வர்ற வரைக்கும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறான்.

publive-image

அடுத்து, சமையல் அம்மாகிட்ட தகவல் சொல்லிட்டியா என கேட்க, ஸ்கூலில் இருந்து சொல்லிருப்பாங்க என்று சொல்கிறான். லட்சுமி கண்ணம்மாவோட பொண்ணுனு நிரூபிக்கிறேன் என மனதுக்குள் நினைக்கும் பாரதி, எல்லோரையும் வெளியே போகச் சொல்கிறான்.

அடுத்ததாக, பாரதிக்கு உண்மை தெரிஞ்சுருச்சா என சந்தேகப்படும், கண்ணம்மா தவிப்புடன் லட்சுமியை தேடி பாரதி வீட்டுக்கு வருகிறாள். இங்கு, லட்சுமியை பொய் சொல்லி எங்களோட பழக வச்சு ஒண்ணு சேர்றதுக்கு நாடகம் போடுறியா என பழசை எல்லாம் நினைத்து பார்க்கிறான் பாரதி.

publive-image

அடுத்து, அஞ்சலியிடம், என்ன நடந்தது என கேட்கின்றனர், அவளின் பெற்றோர். தயங்கியபடியே அஞ்சலி, லட்சுமி கண்ணம்மாவோட குழந்தை என்று சொல்கிறாள். இதைக்கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட, லட்சுமியை பற்றி பாரதிக்கு எதுவும் தெரியாது என்று, நடந்ததை எல்லாம் சொல்கிறாள்.

publive-image

பாரதிக்கு உண்மை தெரிஞ்சதால்தான் பாரதி இப்படி பண்றான், இத எப்படி சமாளிக்க போறோம் என்று சௌந்தர்யாவும், வேணும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கண்ணம்மாவுக்கு போன் செய்கிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment