Advertisment

Vijay TV Serial; கோட்டுக்கு அந்தப் பக்கம் நீ… இந்தப் பக்கம் நான்… பாரதியை வெறுப்பேற்றும் கண்ணம்மா

Vijay TV barathikannamma serial today episode family compel barathi: ஹேமாவுக்காக கண்ணம்மாவை அழைக்கும் பாரதி, ஹேமாவை இங்க கூட்டி வாங்க என கெத்தாக பதிலடி கொடுக்கும் கண்ணம்மா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கோட்டுக்கு அந்தப் பக்கம் நீ… இந்தப் பக்கம் நான்… பாரதியை வெறுப்பேற்றும் கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

ஹேமா அமெரிக்கா போகாததால், லட்சுமி சந்தோஷமா இருக்கா, அதனால் நீயும் சந்தோஷமான இருக்க, நீயும் பாரதியும் ஹாஸ்பிட்டலில் ஒன்ன இருந்தது நல்ல இருந்துச்சு என கண்ணம்மாவிடம் சொல்கிறாள் துளசி. நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு இருக்குறத பார்க்குறப்ப கஷ்டமா இருக்கு, ஆனா இப்ப உங்க கோபம் குறைஞ்சு இருக்குனு நினைக்கிறேன் என்றும் சொல்கிறாள் துளசி. மேலும் லட்சுமிக்காக நீ, பாரதியோட சேர்ந்து வாழனும் என்றும் சொல்கிறாள். இதைக்கேட்டு கண்ணம்மா கோபப்பட சமாதானம் செய்கிறாள் துளசி. ஹேமாவுக்காக தான் எல்லாம் செஞ்சேன் என கண்ணம்மா சொல்ல, கொஞ்சம் லட்சுமியை பத்தி யோசி என்கிறாள் துளசி. அதற்கு கண்ணம்மா, லட்சுமி பெரிய பொண்ணு ஆன எல்லாத்தையும் புரிஞ்சுக்குவா, பாரதியை மன்னிக்கிற நிலையில் நான் இல்லை, லட்சுமிக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறாள்.

publive-image

அடுத்ததாக, வீட்டில் ஹேமா காய்ச்சலால் அவதிப்படுகிறாள். இதனால், பாரதியிடம் என்ன செய்யப்போற என கேட்கிறாள் சௌந்தர்யா. பாரதி நான் அமெரிக்கா போகப்போறதில்லை என உறுதியாக சொல்ல, பிரச்சனையை கண்டு ஒடாதே என அட்வைஸ் செய்கிறார் வேணு. நானும் டாக்டர் தான் ஹேமாவ என்னால் நல்ல பாத்துக்க முடியும் என்கிறான் பாரதி. அப்புறம் டாக்டர் பிரியா ஏன் ஹேமா சமையல் அம்மா கூட இருக்கனும்னு சொன்னாங்க என கேட்கிறாள் சௌந்தர்யா. ஹேமா விஷயத்துல நீ ரொம்ப தப்பு பண்ற என எல்லோரும் பாரதியை குற்றம் சுமத்துகிறார்கள்.

publive-image

கண்ணம்மாவை போய் கூட்டி வர சொல்கிறாள் சௌந்தர்யா. பாரதி மறுக்க, எல்லோரும் வற்புறுத்துகிறார்கள். ஹேமா கண்ணம்மாவ அம்மாவ நினைக்குற அதை நீங்க நினைச்சாலும் தடுக்க முடியாது என்கிறாள் அஞ்சலி. அப்போது, சௌந்தர்யா, கண்ணம்மாவை கூட்டி வந்து நீ குடும்பம் நடத்த வேணாம், அத நீ செய்யவும் மாட்ட, ஹேமாவுக்காக கூட்டிட்டு வா என்கிறாள். பின்னர் எல்லோரும் வற்புறுத்தவே, கண்ணம்மாவை கூட்டி வருவதாக ஒத்துக்கொள்கிறான்.

publive-image

அடுத்து, கண்ணம்மா வீட்டுக்கு வருகிறான் பாரதி. வீட்டிற்கு வெளியில் நின்று யோசிக்கும் பாரதியை, பூக்கார அம்மா துரத்த, கண்ணம்மா எனக்கு தெரிஞ்சவர்தான் என தடுக்கிறாள். பின்னர் உள்ளே வரும் பாரதியிடம் ஹேமாவை பற்றி விசாரிக்கிறாள் கண்ணம்மா. என்ன விஷயமா வந்தீங்க என கண்ணம்மா கேட்க, என் கூட கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் என சொல்கிறான் பாரதி. அதற்கு, ஹேமா கூட சமையல் அம்மா ஒரு வாரம் இருக்கனும் அதனால் நீ என் வீட்டுக்கு வரணும் என அழைக்கிறான். அப்போது டாக்டர் சொன்னதால் தானே வந்திருக்கிங்க என பாரதியை வெறுப்பேற்றுகிறாள் கண்ணம்மா. ஹேமாவுக்காக கெஞ்சுகிறான் பாரதி. அதற்கு பாரதி, நா இப்ப உங்க கூட வந்த என்னை, பொல்லாதவளா நினைப்பிங்க, அதனால நா வரலை என்கிறாள் கண்ணம்மா. பின்னர், ஹேமா நல்ல இருக்கனும்னா, ஹேமாவ இங்க கொண்டு வந்து விடுங்க என்கிறாள். பாரதி யோசிக்க, இது உங்க வீடு மாதிரி மாளிகை இல்லை, ஆன இங்க அன்பு நிறைஞ்சிருக்கு, ஹேமா இங்க கூட்டி வந்து விடுங்க என முடிவா சொல்கிறாள் கண்ணம்மா. இதைக்கேட்டு டென்ஷனாக வெளியே செல்கிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment