Advertisment

Vijay TV Serial; பொங்கி எழுந்த பெண்ணினம்… ஹேமாவை மீட்ட கண்ணம்மா

Vijay TV barathikannamma serial today episode kannamma rescue hema: ஹேமாவை மீட்ட கண்ணம்மா, ரவுடிகளை துவைத்த பெண்கள் இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; பொங்கி எழுந்த பெண்ணினம்… ஹேமாவை மீட்ட கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

போலீசிடம் சிசிடிவி காட்சிகளை செக் பண்ண சொல்கிறான் பாரதி. அப்போது அங்கு வரும் வெண்பாவிடம் ஹேமா கிடைக்கலை என சொல்கிறான் பாரதி. அதற்கு வெண்பா இவ்வளவு பெரிய ஏரியாவுல, தனியா தேடுறது கஷ்டம் என சொல்ல, நா உன்ன இங்கு வர சொன்னனா என வெண்பா மீது கோபப்படுகிறான் பாரதி. உடனே சாந்தி, ஹேமா காணாமல் போனத நினைச்சு வெண்பா ரொம்ப வருத்தப்பட்டாங்க என சமாதானம் செய்கிறாள். அப்போது வெண்பா, போலீஸ் ஸ்டேசன்ல என்ன உன்னோட மனைவி, ஹேமாவோட அம்மானு சொன்னது உண்மைதான், ஹேமா மேல எனக்கு அக்கறை இருக்கு என பாரதியிடம் நெருங்குகிறாள். உடனே பாரதி, இந்த நேரத்தில இத பேசுவியா, கண்ணம்மாவ வெறுப்பேற்ற தான் அப்படி சொன்னேன், ஹேமாவ நான் தனியா தேடிக்கிறேன் என கோபமாக கிளம்புகிறான்.

அடுத்து சாந்தி, ஹேமா இருக்கும் காரை நெருங்கி, இந்தக் காருக்குள் சத்தம் கேட்பதாக சொல்கிறாள். வெண்பா வந்து யாரும் இல்லை என சாந்தியை திட்டி அழைத்துச் செல்கிறாள். சிறிது நேரத்தில் அந்த காருக்கு அருகில் தன் தந்தையுடன் வருகிறாள் கண்ணம்மா. இருவரும் அந்த பகுதியில் தேட ஆரம்பிக்கின்றனர். காருக்கு அருகில் வந்து கண்ணம்மா, ஹேமா என கத்த, மயக்கத்தில் இருக்கும் ஹேமா எழுந்து சமையல் அம்மா என கத்துகிறாள்.

அப்போது, கண்ணம்மாவின் அப்பா வேறு தெருவில் தேடலாம் என அழைக்கிறார். ஹேமா ஒரு கம்பியை எடுத்து காருக்குள் தட்டுகிறாள். காரிலிருந்து சத்தம் கேட்க, காருக்குள் பார்க்கிறாள் கண்ணம்மா. கார் டிக்கியிலிருந்து சத்தம் வர, கண்ணம்மாவும் அவளது அப்பாவும் டிக்கியை திறக்க முயற்சிக்கின்றனர். கண்ணம்மாவின் அப்பா டிரைவரைக் கூப்பிட செல்கிறார். கண்ணம்மா ஹேமாவுக்கு தைரியம் கூறுகிறாள்.

டிரைவர் இல்லாததால், டிக்கியை திறக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்போது அங்கு வரும் வெண்பாவின் ரவுடிகள், என்ன விஷயம் என கேட்க, ஹேமா உள்ளே இருக்கும் விஷயத்தைக் கூறுகிறார் கண்ணம்மாவின் அப்பா. இதைக் கேட்டு சந்தோஷமடையும் ரவுடிகள், ஹேமாவை இங்கே இருந்து தூக்கிரலாம் என முடிவு செய்கின்றனர்.

publive-image

அப்போது அங்கு வரும் டிரைவர், டிக்கியை திறக்கிறார். மயங்கிய நிலையில் கிடக்கும் ஹேமாவை தூக்குகிறாள் கண்ணம்மா. டிரைவர் இந்த குழந்தை எப்படி வந்தது என அதிர்ச்சி அடைய, ரவுடிகள் ஹேமாவை கடத்துனது நாங்க தான், எங்ககிட்ட கொடுத்து போயிடுங்க என கண்ணம்மாவை மிரட்டுகிறார்கள். கண்ணம்மா கொடுக்க மறுக்க, கண்ணம்மாவிடம் இருந்து ஹேமாவை இழுக்கிறான் ரவுடிகளில் ஒருவன். தடுக்க வரும் கண்ணம்மாவின் அப்பாவை தள்ளிவிட்டு, கண்ணம்மாவையும் அடிக்கிறார்கள். ஹேமாவை விடாமல் பிடித்துக் கொள்கிறாள் கண்ணம்மா.

publive-image

கண்ணம்மாவை ரவுடிகள் அடிப்பதை பார்க்கும், அங்குள்ள பெண்கள், ஒடி வந்து ரவுடிகளை அடிக்கின்றனர். ரவுடிகளை அடித்து கண்ணம்மாவையும் ஹேமாவையும் காப்பாற்றுகின்றனர் பெண்கள். அப்போது ஹேமாவுக்கு வலிப்பு வர, காரில் ஏற்றி ஹேமாவை ஹாஸ்பிட்டல் கொண்டு செல்கிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment