Advertisment

Vijay TV Serial; வேணுவுக்கு ஹார்ட் அட்டாக்… பதறி ஓடி வரும் கண்ணம்மா… கடுப்பில் பாரதி

Vijay TV barathikannamma serial today episode venu's drama: ஹார்ட் அட்டாக் என நடிக்கும் வேணு, கண்ணம்மாவிடம் அசிங்கப்பட்ட வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; வேணுவுக்கு ஹார்ட் அட்டாக்… பதறி ஓடி வரும் கண்ணம்மா… கடுப்பில் பாரதி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

நெஞ்சு வலியால் வேணு துடிக்க, தவித்துப் போகிறாள் சௌந்தர்யா. பாரதியை கூப்பிட வா என சௌந்தர்யா கேட்க, வேண்டாம் என தடுக்கிறார் வேணு. பின்னர் வேணு வலி அதிகமாக, அகிலும் சௌந்தர்யாவும் வேணுவை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹாஸ்பிட்டலில் பாரதி, வேணுவை பரிசோதித்து, சின்னதா மாரடைப்பு மாதிரி இருக்கு என்கிறான். ஆனால், வேணு நம்பாமல் இருக்க, கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் சொல்கிறான் பாரதி. இருப்பினும் வேணு, பாரதியை நம்ப மறுத்து வேற டாக்டரிடம் காட்டச் சொல்கிறார். வேணு நடிப்பதாக அகில் சந்தேகப்படுகிறான். அப்போது வேணு வலிப்பதுப்போல் நடித்துக் கொண்டே, என்னோட ஆசை கண்ணம்மாவை நான் உடனடியாக பார்க்க வேண்டும் என சொல்ல, கடுப்பாகிறான் பாரதி. பின்னர் சௌந்தர்யா கண்ணம்மாவை கூப்பிடுவதாக சொல்ல, பாரதி அப்பாவுக்கு ஒண்ணுமில்லை என கண்ணம்மாவை கூப்பிட வேண்டாம் எனத் தடுக்கிறான். பின்னர் அங்கிருந்து பாரதி கிளம்ப, கண்ணம்மாவையும் பாரதியையும் சந்திக்க வைக்கதான் இப்படி நடிச்சேன் என்கிறார் வேணு.

publive-image

அடுத்ததாக, பட்டுப்பாவாடையில் வரும் லக்‌ஷ்மியைப் பார்த்து, சௌந்தர்யா மாதிரி இருப்பதாக நினைக்கிறாள். இதேயே குமாரும் சொல்ல, லட்சுமியின் அப்படி தான் இருக்கேன் என்கிறாள். உடனே கண்ணம்மா உங்க பாட்டி மாதிரி தான் இருக்க என சமாளிக்கிறாள். பின்னர் லட்சுமி விளையாட கிளம்ப, குமாரிடம் இதுபோல் சொல்ல வேண்டாம் என்கிறாள் கண்ணம்மா. அப்போது போன் செய்யும் சௌந்தர்யா, மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் உடனே வா என சொல்ல, பதறியவாறு கிளம்புகிறாள் கண்ணம்மா.

publive-image

அடுத்ததாக, கண்ணம்மாகிட்ட உங்கள நீங்க எப்படி கூப்பிட சொன்னீங்க என சாந்தி கேட்க, மிஸஸ் வெண்பா பாரதினு கூப்பிட சொன்னேன் என்கிறாள் வெண்பா. கண்ணம்மா கூப்பிட்டாளா என சாந்தி கேட்க, அவ கூப்பிடல ஆனா பாரதிய டைவர்ஸ் பண்ண சொல்லிருக்கேன் என்கிறாள். ஆனால் சாந்தி, உங்கள பாரதியோட மனைவினு கூப்பிட்டா தான் நல்லா இருக்கும், உடனே கூப்பிட சொல்லுங்க என்கிறாள். உடனே வெண்பா போன் செய்ய கட் பண்ணுகிறாள் கண்ணம்மா. வெண்பா மீண்டும் கால் பண்ண, போனை எடுக்கும் கண்ணம்மா, அதான் கட் பண்றேனே அறிவில்லையா எனத் திட்டி போனை வைக்கிறாள். அசிங்கப்பட்டதை சாந்தியிடம் காட்டிக்கொள்ளாமல் சமாளிக்கிறாள் வெண்பா. ஆனால் சாந்தி, கண்ணம்மா நல்லா திட்டிருப்பா என சந்தேகமாக நக்கலாக சிரிக்கிறாள்.

publive-image

அடுத்ததாக, ஹாஸ்பிட்டலில் வேணு பசிக்குது என சொல்ல, அகில் வாங்கி வரும் ஸ்னாக்ஸை எல்லாரும் சாப்பிடுகிறார்கள். அப்போது அங்கு பாரதி வர, எல்லோரும் நடிக்க, பாரதி கடுப்பாகி திட்டுகிறான். பின்னர் பாரதி வெளியே செல்லப் போக, அங்கு வருகிறாள் கண்ணம்மா. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment