Advertisment

Vijay TV Serial: கண்ணம்மா மாமியாருக்கு இவ்ளோ சின்ன மகனா? க்யூட் வீடியோ

Vijay Tv Bharathi Kannamma Serial actress Viral Video Tamil News தன்னுடைய சொந்த மகனுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ செய்து அப்லோட் செய்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Vijay Tv Bharathi Kannamma Serial actress Viral Video Tamil News

Vijay Tv Bharathi Kannamma Serial actress Viral Video Tamil News

Vijay Tv Bharathi Kannamma Serial actress Viral Video Tamil News : ஏராளமான க்ரிஞ் திரைக்கதைக்கு நடுவிலும் நீண்ட வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தில் இருக்கும் நெடுந்தொடர், பாரதி கண்ணம்மா. நிறம் பற்றிய ஸ்டீரியோடைப்பை உடைத்து, தொடக்கத்தில் விறுவிறுவென நகர்ந்துகொண்டிருந்த சீரியல், இப்போது கொஞ்சம் ஸ்லோ என்றுதான் சொல்லவேண்டும்.

Advertisment
publive-image

சின்னத்திரை நடிகர், நடிகைகள் டிவியில் தோன்றுவது மட்டுமல்லாமல், நம் அலைபேசியிலும் தோன்றுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். விதவிதமான போட்டோஷூட் செய்து இன்ஸ்ட்டாகிராமில் அப்லோட் செய்வது முதல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது பதிவேற்றுவது வரை சமூக வலைத்தளங்களில் அவர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

அந்த வரிசையில் பாரதி கண்ணம்மா தொடரில், கண்ணம்மாவின் ஸ்வீட் மாமியார் சௌந்தர்யா (ரூபாஸ்ரீ), தன்னுடைய சொந்த மகனுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ செய்து அப்லோட் செய்திருக்கிறார். இதுதான் சமீபத்திய வைரல் ஹிட்.

'கண்கள் நீயே காற்றும் நீயே..' எனும் தாய்-மகன் இடையில் உள்ள உணர்வுப்பூர்வமான அன்பை வெளிப்படும் பாடலுக்கு ஏற்றபடி, தன்னுடைய சுமார் 10 வயது நிரம்பியிருக்கும் தன் மகனுடன் இணைந்து காணொளி எடுத்திருக்கிறார் ரூபாஸ்ரீ. ஏற்கெனவே ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களை அப்லோட் செய்திருந்தாலும், தன் மகனோடு சேர்ந்து எடுக்கப்பட்ட முதல் காணொளி இதுதான். இந்த காணொளியைக் கண்ட பலரும், 'என்னது சௌந்தர்யாவுக்கு இவ்வளவு சின்ன மகனா?' என்றபடி கமென்ட் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment