Advertisment

பாரதி வீட்டில் லட்சுமி; கோபத்தில் கொந்தளித்த கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், தனது குழந்தை லட்சுமி முதன்முறையாக பாரதி வீட்டிற்கு சென்றிருப்பதை அறிந்து கண்ணாம்மா கோபத்தில் கொந்தளிக்கிற எபிசோடு பார்வையாளர்கள் இடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
vijay tv, vijay tv bharathi kannamma serial, bharathi kannamma, பாரதி கண்ணம்மா, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், ரோஷினி ஹரிபிரியன், பாரதி கண்ணம்மா சீரியல் கதை, roshini haripriyan, bharahti kannamma today episode, bharathi kannamma story

Bharathi Kannamma serial news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில், தனது கணவன் பாரதியை பிரிந்து வாழும் கண்ணாம்மா, அவளுடைய குழந்தை லட்சுமி முதன்முறையாக பாரதி வீட்டிற்கு சென்றிருப்பதை அறிந்து கண்ணாம்மா கோபத்தில் கொந்தளிக்கிற எபிசோடு பார்வையாளர்கள் இடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Advertisment

வங்காளத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணகோலி சீரியலைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியல் பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு, சில வாரங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியல்தான் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பியில் முதலிடம் பெற்றது. பின்னர், இரண்டாவது இடத்திற்கு இறங்கினாலும் தொடர்ந்து முன்னணி சீரியலாக திகழ்ந்து வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலின் கதை இதுதான். டாக்டரான பாரதியை வேலைகாரியான படிக்காத கண்ணம்மா கல்யாணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதி மீது ஆசைப்படும் வெண்பா சதி செய்து பாரதியையும் கண்ணம்மா பிரித்து விடுகிறாள். கண்ணம்மா மீது பாரதிக்கு சந்தேகத்தை உருவாக்கி விடுகிறாள். பாரதியை விட்டு பிரிவதற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கே தெரியாமல் அவருடைய மாமியார் சௌந்தர்யா வளர்க்கிறார்.

பாரதியைவிட்டு பிரிந்த கண்ணம்மா தனது சொந்தக் காலில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று போராடி வரும் நிலையில், கண்ணம்மா வளர்க்கும் லட்சுமியும் மாமியார் வளர்க்கும் ஹேமாவும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிப்பதன் மூலம் இருவரும் ஒன்றாக சந்தித்துகொள்கின்றனர்.

இந்த சூழலில்தான் கண்ணாம்மாவின் குழந்தை லட்சுமி, பாரதி வீட்டிற்கு வருகிறாள். அவளை சந்தோஷமான உள்ளே அழைத்து செல்கிறாள் சௌந்தர்யா. வீட்டை பிரம்மித்துப் பார்க்கும் லட்சுமி, அகிலிடம் இந்த வீட்ல யாராவது வாடகைக்கு இருக்காங்களா? என கேட்கிறாள். அதற்கு அகில் இந்த வீட்டில் நாம் மட்டும்தான் இருக்கிறோம் என்று பதில் கூறுகிறான். அப்போது, அங்கே வருகிற மல்லிகா, இந்த பாட்டியை உனக்கு பிடிச்சிருக்காமா? என என கேட்டதற்கு லட்சும் பிடித்திருகிறது என்று கூறுகிறாள். அதோடு, ‘நான் பார்க்க அப்படியே இவர்களை மாதிரியே இருக்கேன்னு டாக்டர் அங்கிள் சொல்வார்’ என்று லட்சுமி கூறுகிறாள்.

சௌந்தர்யாவும் நான் சின்ன வயசுல எப்படி இருந்தேனோ அப்படியே நீ இருக்கிறாய் என்று கூறுகிறார். அப்போது லட்சுமி, ஹேமா எங்க அம்மா மாதிரியே இருக்கிறாள் என்று பாட்டி சுந்தர்யாவிடம் கூறுகிறாள். அப்போது, பார்வையாளர்கள் நெகிழ்ந்து போகிறார்கள்.

இதனிடையே வீட்டிற்கு வரும் கண்ணம்மா, துளசியிடம் லட்சுமி எங்கே என்று கேட்கிறாள். நான் வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, லட்சுமி எங்கே என்று கேட்கிறாள். அந்தநேரத்தில், அங்கே வரும் குமார், லட்சுமி அடம்பிடித்து அடம்பிடித்து ஹேமா வீட்டிற்கு கொண்டு போய்விடச் சொன்னதைப் பற்றி கூறுகிறான்.

இதைக் கேட்டு கோபத்தில் கொந்தளிக்கும் கண்ணம்மா, சின்ன பொண்ணு கேட்டால் நீங்கள் அழைத்துக்கொண்டு போயிருக்கிறீர்கள். முதலில் அவளை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்கிறாள். இதையடுத்து, கண்ணம்மா துளசியிடம் ஒவ்வொரு முறையும் லட்சுமி டாக்டரைப் பார்க்க போகலாம் என்று சொல்லும்போது நான் ஏன் போகாமல் இருந்தேன் தெரியுமா? அங்கே இவள் யாருக்கு பிறந்தவள் என்று கேட்டால், அதை அவளால் தாங்கமாட்டாள். சின்ன குழந்தை மனசுல எதுவும் பாதித்து விடக்கூடாது என்றுதான் நான் விலகி விலகி போய்க்கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறாள்.

இதைக்கேட்டுக்கொண்ட துளசி சரிவிடு கண்ணம்மா, பொறுமையாக இரு. லட்சுமியை குமார் அண்ணன் அழைத்துக்கொண்டு வந்துவிடுவார் என்று சொல்கிறாள்.

இதனிடையே, பாரதி வீட்டில் லட்சுமியும் ஹேமாவும் படித்து கொண்டிருக்கும் போது, பாரதி வருகிறான். சௌந்தர்யா, இரண்டு குழந்தைகளையும் மடியில் வைத்துக் கொஞ்சும் பாரதியை சந்தோஷத்துடன் பார்க்கிறாள். பிறகு, பாரதி இரண்டு குழந்தைகளையும் மாடிக்கு அழைத்துச் சென்று விளையாடுகிறான்.

இதைப் பார்க்கும் அஞ்சலி எவ்வளவு அழகாக விளையாடுகிறார்கள் பாருங்கள் என்று அகிலிடம் கூறுகிறாள். அதற்கு அகில் நீயும் அடுத்த வருஷம் நம்ம குழந்தை கூட விளையாடுவாய் என சொல்கிறான். அதற்கு அஞ்சலி ஆமாம், குழந்தை பிறந்தால் முழு நேரமும் குழந்தையுடன்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறாள். இத்துடன் இந்த எபிசோடு முடிவடைந்தது.

பாரதியின் வீட்டுக்கு செல்லும் லட்சுமி அங்கே பாட்டி சௌந்தர்யா, தனது அப்பாதான் பாரதி என்று தெரியாமல் டாக்டர் அங்கிள் என்று அழைப்பதும் தனது சகோதரிதான் ஹேமா என்று தெரியாமல் லட்சுமி அவளுடன் விளையாடுவதும் பார்வையாளர்கள் இடையே நெகிழ்ச்சியாகவும் வரும் எபிசோடு மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment