‘அப்பா ஏன் என்கிட்ட பேசலை?’ கண்ணம்மாவிடம் துளைக்கும் லட்சுமி

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மகள் தனது தாயிடம் என்னோட அப்பாக்கு ஏன்மா என்கிட்ட பேசவேண்டும் என்ற ஆசை இல்லை என்று துளைத்து துளைத்து கேட்பதைப் பார்ப்பதற்கு உருக்கமாக அமைந்துள்ளது.

vijay tv, vijay tv bharathi kannamma serial, bharathi kannamma, kannamma, bharathi, lashmi asks at kannamma, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி, கண்ணம்மா, லட்சுமி, பாரதி கண்ணம்மா சீரியல் செய்திகள், விஜய் டிவி, லட்சுமி கேள்வி, tamil tv serial news, vijay tv serial news, bharathi kannamma news

Vijay TV Serial: விஜய் டிவியில் பார்வையாளர்களின் ஏகோபித்த அதரவுடன் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவின் மகள் லட்சுமி தனது தந்தை ஏன் தன்னை பார்க்க வரவில்லை தன்னுடன் ஏன் பேசவில்லை என்று கேள்வி கேட்டு துளைக்கும் காட்சி பார்வையாளர்களை மனதை உருக்குவதாக இருந்தது.

பாரதி கண்ணம்மா சீரியலின் கதை இதுதான். டாக்டரான பாரதியை வேலைகாரியான படிக்காத கண்ணம்மா கல்யாணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதி மீது ஆசைப்படும் வெண்பா சதி செய்து பாரதியையும் கண்ணம்மா பிரித்து விடுகிறாள். கண்ணம்மா மீது பாரதிக்கு சந்தேகத்தை உருவாக்கி விடுகிறாள். பாரதியை விட்டு பிரிவதற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கே தெரியாமல் அவருடைய மாமியார் சௌந்தர்யா வளர்க்கிறார்.

கடந்த எபிசோடில் கண்ணம்மாவின் குழந்தை தனது தந்தை பாரதி என்று தெரியாமல் பாரதியின் வீட்டுக்கு வந்து தனது இரட்டை ஹேமா, தந்தை பாரதி, பாட்டி சௌந்தர்யாவுடன் விளையாடிவிட்டு சென்றாள். இதையடுத்து, சௌந்தர்யா தனது பேத்தி லட்சுமி வீட்டிற்கு வந்து போனதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறாள்.

அப்போது அங்கே வரும் அகில், எப்படிம்மா சந்தோஷமா இருக்கிறீர்களா? உங்க ஆசைப்படி ரெண்டு குழந்தைகளும் ஒரே வீட்ல விளையாடிவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல், பாரதியும் இரண்டு குழந்தைகளுடன் விளையாடினார்ன். அதற்கு, சௌந்தர்யா, ஆமாம், லட்சுமி கண்ணம்மாவிடம் சொல்லாமல் வந்திருக்கிறாள். எத்தனையோ முறை கண்ணம்மாவை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறேன். ஆனால், அவள் வந்தது இல்லை. ஆனால், இப்போது லட்சுமி அவளாகவே வந்திருக்கிறாள்.

அகில் வீட்டுக்கு லட்சுமி வந்ததைப் பற்றி அஞ்சலியிடம் கேட்கும் போது, லட்சுமி அடிக்கடி வந்தால் அத்தை ரொம்ப சந்தோஷப்படுவார்கல் என்று கூறுகிறாள். அதையேதான் தானும் யோசிப்பதாகக் கூறும் ஹேமாவை கூப்பிட்டு லட்சுமியுடன் விளையாடியது சந்தோஷமாக இருந்ததா என்று கேட்கிறான். ஆமாம் என்று சொல்லும் ஹேமாவிடம், இனிமேல் அடிக்கடி லட்சுமியை வீட்டுக்கு கூப்பிடு, நம்ம அவளுக்கு கிப்ட் எல்லாம் கொடுக்கலாம் என கூறுகிறான். ஹேமாவும் அகிலின் பேச்சுக்கு சரி என்று கூறி தலையாட்டுகிறாள்.

இதனிடையே, கண்ணாம்மாவின் வீட்டில் படித்து கொண்டிருக்கும் லட்சுமி, ஆடம்பரமான பாரதியின் வீட்டைப் பற்றி கூறுகிறாள். அப்போது கண்ணம்மா அந்த வீட்டில் இருக்க எல்லா உரிமையும் உனக்கு இருக்கிறது. ஆனால், உன் அப்பா செய்ய முட்டாள்தனத்தால் நீ விருந்தாளி மாதிரி அந்த வீட்டுக்கு போய் வருகிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள். அப்போது, ஹேமா தவறுதலாக லட்சுமி பையில் வைத்த ரிப்போர்ட்டை எடுத்து கண்ணம்மாவிடம் காட்டுகிறாள்.

அந்த ரிப்போர்ட்டை வாங்கி பார்க்கும் கண்ணம்மா வெண்பா பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து என்ன இருந்தாலும் இதை திறந்து பார்க்க கூடாது என நினைத்து, அப்படியே வைத்து விடுகிறாள். நாளைக்கு பள்ளிக்கூடத்தில் ஹேமாவிடம் அதை கொடுத்து விடுமாறு கண்ணம்மா தனது மகள் லட்சுமியிடம் கூறுகிறாள்.

இதனிடையே, வெண்பாவும், சாந்தியும் ரிப்போர்ட் லட்சுமியின் பையில் கண்ணம்மா வீட்டிற்கு போனதை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். அதன்பிறகு, வெண்பா போனில் பாரதியிடம் ரிப்போர்ட் பற்றி கேட்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருக்கிற மாதிரி இவ்வளவு பயப்படுற, நாளைக்கு லட்சுமி கிட்ட ஹேமா ரிப்போர்ட் வாங்கிட்டு வந்துவிடுவாள் என்று பாரதி கூறுகிறான்.

அடுத்த காட்சியில், கண்ணம்மாவின் வீட்டு சுவற்றில் எழுதி கொண்டிருக்கும் லட்சுமியிடம், என்னாச்சு என கண்ணம்மா கேட்கிறாள். என்னை விடும்மா என் மனசுல உள்ளதை எழுத இந்த சுவரு போதாது. என் அப்பா எனக்காக என்ன செய்தார்? என் தோழியுடைய அப்பா துபாய்ல இருக்கிறார். ஆனால், அவர் டெய்லி வீடியோ மூலம் என் அவருடைய மகளிடம் பேசுகிறார். அந்த பாரதி அங்கிள் எவ்வளவு அன்பாக இருக்கிறார் தெரியுமா. ஆனால், என்னோட அப்பாக்கு ஏன்மா என்கிட்ட பேசவேண்டும் என்ற ஆசை இல்லை என்று துளைத்து துளைத்து கேள்வி கேட்கிறாள். மேலும், அவர் உன்னுடைய மருத்துவ செலவுக்குகூட அவர் உதவி செய்யவில்லையே? அம்மா, இந்த உலகத்திலேயே நான் வெறுக்குற ஒரே ஆள் அவர் தான் என்று லட்சுமி ஆவேசமாக கண்ணம்மாவிடம் கூறுகிறாள். இதைக் கேட்டு கண்ணம்மா கொஞ்சம் அதிர்ந்துதான் போகிறாள். இந்த காட்சியுடன் பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த எபிசொடு நிறைவடைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bharathi kannamma serial lashmi asks at kannamma why her father dint speaks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com