Advertisment

'பாரதி கண்ணம்மா' அம்மா நடிகை இவ்ளோ நல்ல டான்ஸரா? வியந்த ரசிகர்கள்

நடிகை ரூபாஸ்ரீ., சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாரீஸ் ஜெயராஸ் திரைப்படத்தின் கானா பாடலுக்கு, நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
'பாரதி கண்ணம்மா' அம்மா நடிகை இவ்ளோ நல்ல டான்ஸரா? வியந்த ரசிகர்கள்

தனியார் தொலைக்காட்சியில், நாளுக்கு நாள் சுவாரஸ்ய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். குறிப்பாக, கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும், இளம் கதாநாயகியான ரோஷினி, தனது நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

Advertisment

இந்த சீரியலில், கண்ணம்மாவின் கணவரான பாரதிக்கு அம்மாவாக, நடிகை ரூபாஸ்ரீ நடித்து வருகிறார். இவர் அணிந்து வரும் புடவை மற்றும் ஆபரணங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், இவரின் ரசிகைகளாக பெரும்பாண்மையான குடும்பப் பெண்மணிகளே இருக்கின்றனர்.

சமீப காலங்களில், தனது சக நடிகர்களுடன் வீடியோவுக்கு நடனமாடி, தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் நடிகை ரூபாஸ்ரீ. அந்த வகையில், சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாரீஸ் ஜெயராஸ் திரைப்படத்தின் கானா பாடலுக்கு, அவர் நடனமாடிய வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில் தற்போது, அது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள், ‘நீங்க நல்லா டான்ஸ் ஆடுறீங்க’ ‘எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க மேடம்’, ‘டான்ஸ் சூப்பர் அம்மா’, என அவரை பாராட்டியும், ‘குழந்தைகளின் நிகழ்ச்சியில் உங்களது திறமைகளை காண்பித்து பணப் பரிசுகளை பெறலாமே’ என, கிண்டலாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Vijay Tv Viral Dance Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment