vijay tv bhavana : தமிழே தெரியாமல் தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் பணியை தேர்ந்தெடுத்தார் தொகுப்பாளர் பாவனா. பெரிய தமிழ் உச்சரிப்பு பலரும் பின்னால் செய்த நிலையில் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இணங்க தன்னுடைய அதிக திறமையை வெளிப்படுத்தி தற்போது எந்த ஒரு தமிழ்ப் பெண்ணுமே அடையாத உச்சத்தை அடைந்தார்.
Advertisment
தொடக்கத்தில் ராஜ் தொலைக்காட்சியில் நடிகை கல்யாணியுடன் இணைந்து பீச் கேர்ள்ஸ் என்ற நேர்க்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக் காட்சியில் ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர்ஸ், உட்பட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.
சூப்பர் சிங்கரில் பாவனாவின் ஸ்டைலான பேச்சும் குரல் வளமும் பெரும்பான்மையான ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இவர் சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து பறந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். டிஆர்பியில் முதலிடம் பிடித்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 5 பகுதிகளை தொகுத்து வழங்கி டாப் ஆங்கரானார் பாவனா.
குளோபஸ் வழங்கிய சிறந்த தொகுப்பாளினி விருது பாவனாவிற்கு கிடைத்துள்ளது. ஆறாவது சீசனும் பாவனா தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட நிலையில் திடீரென்று பின் வாங்கினார். அதன் பின்பு அவரை விஜய் தொலைக்காட்சியில் பார்க்கவே முடியாமல் போனது. ஆரம்பத்தில் ஒருசில சிறப்பு நிகழ்ச்சிகளை பாவனா கலந்துக் கொண்டார். அதன் பிறகு பாவானவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை.
பாவனா சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கரிங்கில் பிஸியாக இருந்த தருணத்திலேயே சிங்கப்பூர் என்ஜினீயர் நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். பாவான தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என கூறி இருந்தது இசை சரஸ்வதியில் கிடைத்த வாழ்த்தை பற்றி தான்.
அதுமட்டுமில்லை மேற்கிந்தியத் தீவுகளுக்கும் தென்னாப்ரிக்காவுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கும் மாபெரும் அரிய வாய்ப்பும் பாவனாவுக்கு கிடைத்திருந்தது. கூடவே ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
இப்போது பாவனா ட்விட்டரில் மட்டுமே ரொம்ப பிஸி. இவர் ஜோடி நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து தொகுத்து வழங்கிய போது வாங்கிய கலாய்கள், இவர் சிவாவை கலாய்த்தது பாராட்டியது, சேர்ந்து டான்ஸ் ஆடிய அனைத்து வீடியோக்களும் இப்போதும் இணையத்தில் ட்ரெண்டிங் தான். பாவனாவின் ரசிகர்கள் அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஏங்குகிறார்கள். இதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.