/tamil-ie/media/media_files/uploads/2020/08/Bigg-Boss-Tamil-4-contestants-Bigg-Boss-Kamal-Haasan.jpg)
பிக் பாஸ் தமிழ்
Bigg Boss Tamil 4: கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 3 சீசன்கள் முடிந்திருக்கின்றன. 3 சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா காரணமாக சிக்கல் ஏற்பட்டது.
பொறியியல் கலந்தாய்வு : மாலை 4 மணிக்குள் ரேண்டம் எண் வெளியீடு
கொரோனா தொற்று நோயால், சினிமா / சின்னத்திரை படபிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரங்குக்குள் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தொலைக்காட்சிகள் கடந்த சில வாரங்களாக புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் 4 சீசனுக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு செப்டம்பர் மாதத்தில் இருந்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது.
அதோடு பிக்பாஸ் 4 சீசனுக்கான ப்ரமோ வீடியோவும் தயாராக இருக்கிறதாம். இந்த மாத கடைசியில் ஒரு வீடியோவும், செப்டம்பர் முதல் வாரத்தில் மற்றொரு வீடியோவும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சென்னை பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றமா? என்.ஐ.ஏ தீவிர விசாரணை!
இந்த முறை பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில், ரம்யா பாண்டியன், சுனைனா, வித்யூலேகா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் மறுத்தனர். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us