Advertisment

ரசிகர்களின் 'கோமாளி'த்தனம்… விவேக் இறுதி நிகழ்வில் கடுப்பான புகழ்!

நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்துக்கு சென்ற புகழை கண்ட ரசிகர்கள் பலரும் முந்திக் கொண்டு செல்ப்பி எடுக்க முயன்றனர்.

author-image
WebDesk
New Update
ரசிகர்களின் 'கோமாளி'த்தனம்… விவேக் இறுதி நிகழ்வில் கடுப்பான புகழ்!

சின்னக்கலைவானர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல், திரைப் பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

Advertisment
publive-image

விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலமடைந்த புகழ், நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்துக்கு சென்றுள்ளார். நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் புகழை கண்ட அவரது ரசிகர்கள் பலரும் முந்திக் கொண்டு செல்ப்பி எடுக்க முயன்றனர்.

விவேக்கின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட போது, தனது ரசிகர்கள் செல்ப்பி எடுக்க முந்திக் கொண்டதை கண்டு கடுப்பான புகழ், ‘நாம டெத்ல இருக்கோம், உங்களுக்கெல்லாம் எப்படி தான் மனசு வருதோ’ என திட்டிக் கொண்டே நடந்துச் சென்றார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர், கடை திறப்பு விழா ஒன்றுக்கு புகழ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது ரசிகர்கள் குவியத் தொடங்கியதால் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்திய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cook With Comali Pughal Vijay Tv Cook With Comali Vivek Death
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment