vijay tv host nisha cries on promo is main topic on net, விஜய் டிவியின் காமெடி ஷோவில் வந்து புகழடைந்த பிக்பாஸ் நிஷாவின் கணவர் பேசிய நீயா நானா நிகழ்ச்சியின் வீடியோதான் தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி சாம்பியன்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் நிஷா. தனிப் பெண்ணாக அந்த நிகழ்ச்சியில் வந்து கலக்கியவர் நிஷா. காமெடியில் பெரிதாக பெண்கள் வருவதில்லை என்ற பொதுப்பேச்சை உடைத்தார். சாதாரண கிராமத்தில் இருந்து வந்த அவர் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நெட்டிசன்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். ஊடகத்துறையில் இருக்கும் பெண்கள் ஒருபுறம் அவர்கள் குடும்பத்தினர் மறுபுறம் என்று இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் புரோமா தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக உள்ளது.
இந்த புரோமோவில் நிஷாவின் கணவர், நிகழ்ச்சியின்போது கலகலப்பாக பேசும் அவர் வீட்டிற்கு வந்தால் பேசுவதே இல்லை . ஒரு கேள்வி கேட்டால் 15 நிமிடங்களுக்கு பிறகே அவர் பதில் கூறுவார் என்று அவர் கூறினார். இதை கேட்ட நிஷா அழுதுவிடுவார். மேலும் அடுத்த ப்ரோமோவில் எல்லா கெட்ட வார்த்தைகளையும் நான் கேட்டுவிட்டேன் என்று அவர் கூறுவார். மேலும் இணையதளத்தில் அவர் மீது வரம்பை மீறி வசைபாடிய சிலரால் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிப்படையாகவே இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.