விஜய் டிவியின் புதிய சீரியல் ‘அவளும் நானும்’

‘அவளும் நானும்’ சீரியல் என்ற புதிய சீரியல், பிப்ரவரி 26ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

‘அவளும் நானும்’ சீரியல் என்ற புதிய சீரியல், பிப்ரவரி 26ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

நிலா, தியா இருவரும் இரட்டையர்கள். பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். சிறிய வித்தியாசம் கூட தெரியாது. பணக்கார வீட்டுப் பையனான பிரவீனுடன் நிலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், நிலாவோ வேறொரு பையனைக் காதலிக்கிறார். ஆனால், பெற்றோரிடம் சம்மதம் கிடைக்கவில்லை.

எனவே, திருமணத்துக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போகிறார் நிலா. குடும்பப் பெயரைக் காப்பாற்றுவதற்காக, தியாவை நிலா என்று சொல்லி பிரவீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். நிலா பெயரில் செல்லும் தியாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது? பெற்றோரை விட்டுப் பிரிந்து காதலனுடன் சென்ற நிலாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது? என்பதுதான் ‘அவளும் நானும்’ சீரியலின் கதை.

தனுஷ் இயக்கும் இந்தத் தொடரில், மெளனிகா இரட்டைச் சகோதரிகளாக நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் சீரியல் இதுதான். பிரவீனாக அம்ருத் நடிக்கிறார். பிப்ரவரி 26ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு இந்த சீரியலைக் காணலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close