‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’

Entertainment news in tamil, vijay tv new serial velammal; வேலம்மாள் தொடரின் ப்ரொமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது. ப்ரோமோ வீடியோ பார்த்தாலே இது வரலாற்று தொடர் என்பது தெரியும். தனக்கு ஆண் குழந்தை பிறந்து, தனக்கு பிறகு நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும் அரசனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பெண் என்பதால் தன்னை ஒதுக்குவது பற்றி அதிக வருத்தத்தில் இருக்கும் அந்த பெண் குழந்தை, வருங்காலத்தில் எப்படி நாட்டை ஆளும் அளவுக்கு வளர்கிறாள் என்பது தான் கதை என ப்ரோமோ மூலம் தெரிகிறது.

விஜய் டிவியிலும் மற்ற சேனல்களைப்போல்  சீரியல்களுக்கு பஞ்சமிருக்காது. ஒரு சீரியல் முடியும் முன்பே அடுத்த சீரியலை அறிமுகப்படுத்தி விடுவார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களைப் போல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் பெண்களிடையே தற்போது ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற நாடகங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. விஜய் டிவி நாடகங்களிலும் அவ்வப்போது சில புதுமைகளை செய்து வரும். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாக உள்ள  ‘வேலம்மாள்’ என்ற சீரியல் வரலாற்று தொடராக  அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

காற்றின் மொழி சீரியல் இந்த வாரத்துடன் முடிய உள்ள நிலையில் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் வேலம்மாள் சீரியல் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.


தற்போது, வேலம்மாள் தொடரின் ப்ரொமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது. ப்ரோமோ வீடியோ பார்த்தாலே இது வரலாற்று தொடர் என்பது தெரியும். தனக்கு ஆண் குழந்தை பிறந்து, தனக்கு பிறகு நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும் அரசனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பெண் என்பதால் தன்னை ஒதுக்குவது பற்றி அதிக வருத்தத்தில் இருக்கும் அந்த பெண் குழந்தை, வருங்காலத்தில் எப்படி நாட்டை ஆளும் அளவுக்கு வளர்கிறாள் என்பது தான் கதை என ப்ரோமோ மூலம் தெரிகிறது.

இந்த தொடரில் முக்தா மற்றும் ’மௌன ராகம்’ சீரியல் புகழ் பேபி கிரித்திகா நடிக்கின்றனர். இதில் ஹீரோயினாக நடிக்கும் கிரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் வேலம்மாள் சீரியல் பற்றி பதிவிட்டு உள்ளார். அதில் ”வேலம்மாள். இறுதியாக வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது.  என்னை நம்பி மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த விஜய் டிவிக்கு நன்றி, எனவே என்னுடைய சிறப்பான பங்களிப்பை தருவேன், “.. இறுதியாக என் இன்ஸ்டா குடும்பம். நீங்கள் மட்டும் இல்லை என்றால், சக்தி/வேலன், வேலம்மாள் கதாபாத்திரங்களை என்னால் செய்திருக்க முடியாது. அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv new serial velammal

Next Story
அசுரன் வரிசையில் கர்ணன்; தனுஷ் சினிமா கெரியரில் மேலும் ஒரு மைல்கல்!dhansh acts karnan movie review, karnan review, karnan movie, dhanush, கர்ணன் திரை விமர்சனம், கர்ணன், தனுஷ், சந்தோஷ் நாராயணன், மாரி செல்வராஜ், dhanush acts karnan, mari selvaraj, santhosh narayanan, poo ram, azhagam perumal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com