Advertisment

Pandian Stores: ஐஸ்வர்யாவை தேடிவந்து பேசிய மல்லி மகன்; கடுப்பாகி கிளம்பிய கண்ணன்

பிரஷாந்த்தைப் பார்க்கும் கண்ணன், “இங்க என்ன சினிமாவா எடுக்கிறாங்க… ஹீரோ மாதிரி கிளம்பி வந்திருக்கான்.” என்று மனதுக்குள் மைண்ட் வாய்ஸில் கூறுகிறான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay tv, pandian stores serial, pandian stores today episode, kannan upset because of prashanth speaking with Aishwarya, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ், தனம், சத்யமூத்தி, கண்ணன், மல்லி மகன் பிரஷாந்த், முல்லை கதிர், ஜீவா மீனா, dhanam, sathyamurthy, mullai kathi, jeeva, meena, malli

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்த கதையை சுவாரஸியத்துடன் இங்கே காணலாம்.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா கல்லூரியில் கண்ணனுக்காக காத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது, அங்கே வரும் ஐஸ்வர்யாவின் தோழி ஒருத்தி யாருக்காக காத்திருக்கிறாய் என்று கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, கண்ணனுக்காக காத்திருக்கிறேன் என்று கூறுகிறாள். அதற்கு அவள் தோழி, “கண்ணனுக்கு இல்ல கண்ணன் மாவுக்கு என்று சொல்லு” என்று கிண்டல் செய்துவிட்டுப் போகிறாள்.

அப்போது அங்கே தூரத்தில் காரில் ஸ்டைலாக ஹீரோ மாதிரி வந்து இறங்கிய இளைஞன் ஐஸ்வர்யாவை நோக்கி வந்து ஹாய் என்று சொல்கிறான். ஐஸ்வர்யா யார் என்று தெரியாமல் முழிக்கிறாள். பிறகு, அந்த இளைஞன், “என்னை தெரியலியா? நான்தான் மல்லியோட சன் பிரஷாந்த்..” என்று கூறி கூலிங்கிளாசை கழட்டுகிறான். அதற்குப் பிறகு, ஐஸ்வர்யா, “ஞாபகம் வந்துருச்சு உங்களை நான் முருகன் மாமா வீட்ல பார்த்திருக்கேன். இங்கே என்ன பண்றீங்க? இந்த காலேஜ்ல ஜாயின் பண்ணப் போறீங்களா?” என்று கூறுகிறாள்.

இதைக் கேட்ட, மல்லி மகன் பிரஷாந்த், “நான் ஒன்னும் சின்னப் பையன் இல்லை. நான் எப்பவோ காலேஜ் முடிச்சிட்டேன். இப்பதான், சித்தியோட இங்க கிராஸ் பண்ணேன். அப்பதான் சித்தி நீ இங்க இந்த காலேஜ்லதான் படிக்கிறேன்னு சொன்னாங்க. அதான், சித்தியை இறக்கிவிட்டுவிட்டு உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்.” என்று கூறுகிறான்.

ஐஸ்வர்யா, “என்னை எதுக்காக பார்க்க வந்தீங்க” என்று கேட்க, பிரஷாந்த், “சும்மாதான். சொந்தக்கார பொண்ணு நீ இங்க படிக்கிற. இந்த ஊர்ல எனக்கு வேற வேலையும் இல்லை. இங்க எனக்கு வேற யாரையும் தெரியாதா… அதான் உன்னை பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன்” என்று கூறுகிறான். அதற்கு ஐஸ்வர்யா சரிசரி என்று தலையாட்டுகிறாள்.

தொடர்ந்து பேசும் பிரஷாந்த், ஐஸ்வர்யாவிடம் நீ எந்த இயர் படிக்கிற என்று கேட்டதற்கு அவள் தேர்ட் இயர் என்று பதில் கூறுகிறாள்.

publive-image

இதையடுத்து பிரஷாந்த், ஐஸ்வர்யாவை வீட்ல டிராப் பண்ணுவதாக சொல்கிறான். ஆனால், ஐஸ்வர்யா தான் தன்னுடைய ஃபிரண்டுக்காக காத்திருப்பதாகக் கூறுகிறாள். “பரவால்லை இன்று ஒரு நாள் நான் டிராப் செய்கிறேன்.” என்று மீண்டும் மீண்டும் பிரஷாந்த் வலியுறுத்தியபோதும் ஐஸ்வர்யா தான் ஃபிரண்டுகூடதான் வருவேன் என்று கூறுகிறாள்.

“ஃபிரண்டோட நீ எப்படி போவ” என்று பிரஷாந்த் கேட்க, பைக்லதான் என்று சொல்கிறாள். “3 மணிக்கு எப்படி வெயில் அடிக்குது பாரு கருத்துப்போயிட மாட்டியா? கார்ல போலாம் வா” என்று கேட்கிறான். “நான் ஏற்கெனவே கலரு… கருத்துப்போனாதான் என்ன? தினமும் ஃபிரண்டோடதான் வருவேன். இன்னைக்கு உங்ககூட வந்துட்டா. ஃபிரெண்ட் தேடுவா…” என்று சொல்லி பிரஷாந்த் உடன் செல்ல மறுத்துவிடுகிறாள். அப்போது, தூரத்தில், கண்ணனின் நண்பவன் ஒருவன், ஐஸ்வர்யா யாரோ ஒரு கார் வைத்திருக்கும் இளைஞன் உடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் பார்க்கிறான். அது யாராக இருக்கும் என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கே ஸ்கூட்டியில் கண்ணன் வருகிறான்.

கண்ணன் தனது நண்பன் அருகே ஸ்கூட்டியை நிறுத்தி, “டேய் நீ இன்னும் கிளம்பளையா?” என்று கேட்கிறான். அதற்கு அவன் நீ எங்க போற என்று கேட்கிறான். அதற்கு கண்ணன், “நா எங்க வீட்டுக்குதாண்டா… ஐஸை டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு போகனும்” என்று கூறுகிறான்.

publive-image

இதைக் கேட்ட கண்ணனின் நண்பன், “ஐஸெல்லாம் நீ டிராப் பண்ணத் தேவையில்லை. அங்க பாரு” என்று காட்டுகிறான். அங்கே பிரஷாந்த்தும் ஐஸ்வர்யாவும் சிரிச்சு பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, கண்ணன், “யார்ரா அவன், நம்ம காலேஜ்லயா படிக்கிறான்.” என்று கேட்கிறான். அதற்கு நண்பன், “நம்ம காலேஜ் மாதிரி தெரியல. வெளியில இருந்து வந்திருக்கிறான். ஐஸ்வர்யாவை தேடித்தான் வந்திருக்கிறான். ரொம்ப நேரமா சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்காங்க… அவன் உனக்கு தெரியும்னு இல்ல நெனச்சேன். உனக்கும் தெரியலனு சொல்றப் பாரு… ஆள் வேற ரொம்ப அழகா இருக்கான். அவங்கூட ஐஸ்வர்யாவும் ஜாலியா பேசிகிட்டு இருக்கா… நீ போய் ஏன் தொந்தரவு பண்ற நீ இங்கேயே நில்லு…” என்று கூறுகிறான்.

இதைக் கேட்ட கண்ணன், “டேய்! ஐஸ நாந்தான் டிராப் பண்ணனும்” என்று கூறுகிறான். ஆனால், அவன் நண்பனோ, “அவன் கார்லதான வந்திருக்கான். அவன் டிராப் பண்ணிப்பாண்டா. விடு…” என்று கூறுகிறான்.

அதற்கு கண்ணன் யாரு என்னனு தெரியாமல் அதற்குள்ள பேசாதடா என்று கூறுகிறான். அதற்கு நண்பன், “யாரு என்னனு தெரியமால அந்த பொண்ணு அவ்வளவு நேரம் பேசிகிட்டிருக்கு…” என்று கூறுகிறான். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஐஸ்வர்யா பிரஷாந்த் இருவரும் காரை நோக்கி போகிறார்கள்.

publive-image

அப்போது நண்பன் கண்ணனிடம், “அவ கிளம்பிட்டாப் பாரு… நீ என்னடான அவளை டிராப் பண்ணனும்னு நின்னுகிட்டு இருக்கப் பாரு. போ… வீட்டுக்கு போற வேலையை பாரு…” என்று கூறுகிறான். கண்ணன் வருத்தத்துடன் வீட்டுக்குப் புறப்படுகிறான்.

பிறகு, பிரஷாந்த் ஐஸ்வர்யாவிடம் உங் ஃபிரெண்ட் வருவாங்கனு சொன்ன இன்னும் யாரும் வரல என்று கேட்கிறான். அதற்கு ஐஸ்வர்யா வருவாங்க… உங்களுக்கு நேரமாச்சுனா கிளம்புங்க என்று கூறுகிறாள். ஆனால், பிரஷாந்த், நான் உன்னைப் பார்க்கதான் வந்தேன். எனக்கு வேற எதுவும் வேலை இல்லை என்று கூறி ஐஸ்வர்யாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

அடுத்த காட்சி சத்யமூர்த்தியின் வீடு. அங்கே வீட்டில் கூடத்தில் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மீனா, “இனிமேல் தினமும் எல்லோரும் மதியம் வீட்டுக்கு வந்துடுவீங்களா என்று கேட்கிறாள். அதற்கு, ஜீவா, கடை இனிமேல் மதியம் 12 மணி வரைக்கும்தானே. அதுக்கு மேல கடைவைக்க கூடாது. அதனால், மதியம் வந்துடுவோம் என்று கூறுகிறான்.

publive-image

தனம், “இப்போதான் குலுக்கல் டோர் டெலிவரினு ஆரம்பிச்சோம். மறுபடியும் கடையை பாதி நேரம் ஆக்கிட்டாங்க” என்று வருத்தத்துடன் கூறுகிறாள். அதற்கு சத்யமூர்த்தி, “அது எல்லாருக்கும்தான… அது என்ன நம்ம பிரச்னை மட்டுமா உலத்தில உள்ள எல்லாருக்கும்தான இந்த பிரச்னை இருக்கு…” என்று கூறுகிறான். அதற்கு தனம் அது என்னவோ உண்மைதான் என்று சொல்கிறாள்.

அப்போது, வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்கிறது. உடனே மீனா, எங்க அப்பா வர்றாங்களா? இல்லியே… எங்கப்பாவோட வண்டி சத்தம் இப்பைட் கேட்காதே…” என்று கூறுகிறாள். இதற்கு தனம் ஏன் என்று கேட்க, “இல்லிங்க, நம்ம வீட்டுக்கு முன்னாடி கார் சத்தம்னா… அது எங்கப்பா வண்டியாதான இருகனும்” என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கண்ணன், “குன்னக்குடியிலயே உங்கப்பாவைத் தவிர வேற யார்கிட்டயும் கார் இல்லாத மாதிரியெல்லாம் பேசாதீங்க…” என்று நோஸ் கட் செய்கிறான். மீனா இதைக் கேட்டு முகத்தை சுழித்து திருப்பிக் கொள்கிறாள்.

யார் வருகிறார்கள் என்று பார்த்தால், வீட்டுக்கு உள்ளே மல்லி வருகிறாள். சத்யமூர்த்தி வாப்பா மல்லி என்று வரவேற்கிறான். உள்ளே வந்த மல்லியிடம் முல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போன் பேசின அப்போகூட வீட்டுக்கு வரனு சொல்லல என்று கூறுகிறாள். அதற்கு மல்லி, “உன் வீட்டுக்கு வரனும்னா பர்மிஷன் கேட்டுவிட்டுதான் வரனுமா?” என்று கேட்கிறாள். அதற்கு முல்லை அப்படி இல்லை வரனு சொல்லவே இல்லையே என்று கூறுகிறாள்.

publive-image

இதையடுத்து மல்லி, “நான் ஒரு ஆளை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்திருக்கிறேன்” என்று கூறுகிறாள். தனம் யாரு மல்லி என்று கேட்கிறாள். அதற்கு மல்லை, “வர்லியா” என்று கூறிவிட்டு “பிரஷாந்த்… பிரஷாந்த் உள்ள வாடா” என்று கூப்பிடுகிறாள். “என் மகன் பிரஷாந்த்…. உங்களுக்கு எல்லாம் தெரியாது இல்ல. இன்னிக்குதான் வந்தான். அதான், உங்களுக்கு எல்லாம் காமிச்சுட்டு போலாம்னு கூட்டிட்டு வந்தேன்.” என்று கூறுகிறாள்.

எல்லோரும் வாசலை நோக்கி பார்க்க, “முல்லை நாங்க எங்க அவனை பார்த்தோம்” என்று கூறுகிறாள். அதற்கு மல்லி, “அவன் இவன் என்று சொல்லாத அவனுக்கு உன் வயசுதான்… ஆமாம் உனக்கும் அவனுக்கும் ஒரே வயசுதான்… டேய்! உள்ள வா…” என்று கூறி மல்லி பிரசாந்த்தை அழைக்கிறாள்.

எல்லோரும் ஆவலுடன் வெளியே பார்க்க, பிரஷாந்த் சினிமா ஹீரோ போல, முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நிற்கிறான். உடனே அவனை கிண்டல் செய்யும் விதமாக சத்யமூர்த்தி, “ஏம்பா தம்பி எவ்ளோ நேரமா அந்த பக்கமா திரும்பி நிப்ப?… முகத்தை காமிச்சுட்டு உள்ள வா…” என்று கூப்பிடுகிறான். பிரஷாந்த் ரஜினி ஸ்டைலில் வணக்கம் வைத்துவிட்டு உள்ளே வருகிறான். அப்போது, கண்ணன் அவனைப் பார்த்ததும் இவந்தான் ஐசுவோட பேசிகொண்டிருந்ததா என்று நினைத்துப் பார்க்கிறான்.

ஜீவா மல்லியிடம், “உனக்கு இம்புட்டு பெரிய பையனா?” என்று கேட்கிறான்.

அதற்கு மல்லி, “ஆமாம் ஜீவா… நா கல்யானம் ஆகி போகும்போதே இவனுக்கு 7 - 8 வயசு இருக்கும்ல… எனக்கு கல்யாணம் நடந்தே 15 வருஷம் ஆச்சு. அப்ப நீயே கணக்குப் போட்டு பார்த்துக்க…” என்று கூறுகிறாள்.

உள்ளே வந்த பிரஷாந்த், “யார் சித்தி இவங்க எல்லாம்” என்று கேட்கிறாள். அதற்கு, மல்லி, “சொல்லிதான பிரஷாந்த் கூட்டிட்டு வந்தேன். இது என் தங்கச்சி முல்லை… இது முல்லையோட வீட்டுக்காரர் கதிர்…. ஜீவா, மீனா, சத்யமூர்த்தி, தனம், என்று வீட்டில் உள்ளவர்களை எல்லாம் அறிமுகப்படுத்துகிறாள்.

கடைசியாக, கண்ணன் “நான் ஒருத்தன் இங்க இருக்கேன்” என்று கூறுகிறான். பிரஷாந்த் கண்ணனைப் பார்த்து சிரிக்கிறான். “இவன் யாரு சுள்ளான்” என்று கேட்கிறான். அதற்கு மல்லி இவன் கண்ணன் உன்னைவிட சின்னப்பையனாதான் இருப்பான். இவந்தான் இந்த வீட்டோட கடைக்குட்டி.” என்று அறிமுகப்படுத்துகிறாள். பிரஷாந்த்தும் கண்ணனும் முறைத்துப் பார்த்துக்கொள்கிறார்கள்.

சத்யமூர்த்தி ஏப்பா தம்பி வந்து உட்காரு என்று பிரஷாந்த்தை கூப்பிட்டு உட்கார வைக்கிறார்.

இதையடுத்து, மல்லி வீட்ல வேற சேரே இல்லையா, கீழலாம் என்னால உட்கார முடியாது.” என்று கூறுகிறாள். அதற்கு முல்லை, “ரொம்ப பண்ணாதக்கா… கீழ உட்காரு” என்று கூறுகிறாள். அதற்கு மல்லி, “காஸ்ட்லி புடவைடி கீழ உட்கார்ந்தா அழுக்காகிவிடும்” என்று கூறுகிறாள். இதைக்கேட்ட ஜீவா, “அண்ணி வாங்க.. இங்க உட்காருங்க என்று இடம் தருகிறான்.

சத்யமூர்த்தி தம்பி என்ன செய்றீங்க என்று பிரஷாந்திடம் குசலம் விசாரிக்கிறார். அதற்கு பிரஷாந்த் அப்பாவுடன் பிசினஸ் பார்த்துக்கொண்டிருப்பதாக கூறுகிறான். மல்லி, அவருடைய எல்லா பினஸையும் பிரஷாந்த்தான் பொறுப்பா பார்த்துக்கிறான். நானும் பார்த்துக்கிறேன். என்று கூறுகிறாள். மீனா, நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க அதற்கு பிரஷாந்த் நேத்துதான் வந்தேன் பதில் கூறுகிறான். பிறகு, நான் இவங்களை எப்படி கூப்பிடனும் என்று கேட்கிறான். அதற்கு மல்லி இவங்களும் உனக்கு சித்திதான் என்று கூறுகிறாள். மீனா, “என்னது சித்தியா?” என்று ஷாக் ஆகிறாள். பிறகு மல்லி தலையிட்டு, “இவங்களை மீனானு கூப்பிடு… இவங்களை முல்லைனு கூப்பிட்டுக்கோ…” என்ன இப்போ என்று கூறுகிறாள். இதற்கு சத்யமூர்த்தி, “ஏம்பா, முறைனு ஒன்னு இருக்கு இல்ல.” என்று கூறுகிறான்.

அதற்கு மீனா, “அய்யோ மாமா! இவரு ஒன்னும் என்னை சித்தினுலாம் கூப்பிட வேண்டாம்.” என்று கூறுகிறாள்.

பிரஷாந்த், “ஆமாம்! நீங்கள் என்ன செய்றீங்க..” என்று கேட்க, சத்யமூர்த்தி “நாங்கள் மளிகை கடை வச்சிருக்கிறோம்” என்று கூறுகிறான். எங்களைப் பற்றி எதுவுமே சொல்லலையா, என்று சத்யமூர்த்தி மல்லியிடம் கேட்க, அதற்கு அவள், நான் சொன்னேன். எங்க அவன் காதுகொடுத்து கேட்கிறான் என்று சலித்துக்கொள்கிறாள். பிரஷாந்த்தைப் பார்க்கும் கண்ணன், “இங்க என்ன சினிமாவா எடுக்கிறாங்க… ஹீரோ மாதிரி கிளம்பி வந்திருக்கான்.” என்று மனதுக்குள் மைண்ட் வாய்ஸில் கூறுகிறான். அப்போது அருகில் இருக்கும் மீனா, “டே! அதல உனக்கு என்னடா பொறாமை” என்று கேட்டு அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறாள். உடனே கண்ணன் கேட்ருச்சா என்று கேட்க “கேட்டுச்சு… கேட்டுச்சு… உன் மைண்ட் வாய்சை நான் அப்படியே கேட்ச் பண்ணிட்டேன்” என்று கூறுகிறாள்.

இதற்கு அடுத்த காட்சி, ஜீவாவும் மீனாவும் அவர்களுடைய அறையில் இருக்கின்றனர். அப்போது, ஜீவா தலை வலிப்பதாகக் கூறுகிறான். அதற்கு, மீனா இருடா என்று சொல்லிவிட்டு தைலம் எடுத்து தலையில் தேய்த்து விடுகிறாள். பிறகு மீனா, “ஏண்டா தலை வலிக்குதுனு எங்கிட்ட சொல்லல” என்று கேட்கிறாள். அதற்கு ஜீவா, சொல்லல என்று அமைதியாக இருக்கிறான். உடனே ஜீவா, எனக்கு தெரியும், “ஒரு தலைவலிகிட்ட போய் தலைவலி பத்தி சொல்வாங்களா அப்படினுதானா” என்று கேட்டு கவுண்ட்டர் கொடுக்கிறாள். தலைவலி போய்விட்டதாக ஜீவா கூறுகிறான். இதையடுத்து, மீனா, நிலம் விற்பனை செய்ததில் மிச்சம் இருக்கும் பணத்தில் ஒரு கார் வாங்கலாம் என்று ஐடியா சொல்கிறாள். ஆனால், ஜீவா, அது வியாபாரம் பண்றதுக்காக வச்சிருக்கிற பணம் என்று கூறி அவளுடைய யோசனையை மறுத்து விடுகிறான். இதனால், மீனா ஜீவாவுடன் சண்டையிடுகிறாள்.

அடுத்த காட்சி, முல்லை - கதிர் அவர்களுடைய அறையில் இருக்கிறார்கள். கதிர் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறான். சோர்வாக இருக்கும் கதிரிடம் அவனை உற்சாகப் படுத்தும் விதமாக சும்மா தேர்வு எழுதிப் பாருங்கள் என்று கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Pandian Stores Serial Pandian Stores Kathir Mullai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment