திருமணம் முடிந்தது: கனவை எப்படி நனவாக்குவாள் சந்தியா?

சந்தியா எழுதிய கடிதம் சரவணன் கையில் கிடைக்கிறது. அவனுக்கு படிக்கத் தெரியாததால் அதை தூக்கிப் போட்டு விடுகிறான்.

Tamil Serial News, Vijay TV Raja Rani 2
Tamil Serial News, Vijay TV Raja Rani 2

Tamil Serial News:  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த, ‘திருமணம்’ சீரியலின் ஹீரோ சித்து நடிக்கிறார். ஹீரோயினாக முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசாவே நடிக்கிறார்.

மணிக்கூண்டு டாஸ்க்கின் வெற்றியாளர்கள் இவர்கள் தான்!

சரவணன் படிக்காதவர் என்ற உண்மை ஜனனிக்கு தெரியவர, இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என வருத்தத்தில் அழுது கொண்டிருக்கிறார். ஆனால் மறுபுறமோ சரவணனுக்கும், சந்தியாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. நிச்சயம் நடந்துவிட்டதே என்ற வருத்தத்தில் சந்தியா அவரது அறையில் அழுது கொண்டிருக்கிறாள். தனது பெற்றோர் படத்தை பார்த்து அழுது கொண்டே அவர்களுக்கு கடிதம் எழுதுகிறாள். ஆனால் அந்த கடிதம் காற்றில் பறந்து விடுகிறது.

இந்த திருமணத்தை நிறுத்த வேண்டுமென, நீங்கள் படிக்காதவர், சந்தியாவோ படித்து ஐ.பி. எஸ். ஆகும் கனவோடு இருப்பவள், இந்த உண்மை உங்கள் இருவருக்கும் தெரியாது என சரவணனிடம் கூறுகிறாள் ஜனனி. அதை கவனிக்காத சரவணன் அங்கிருந்து சென்று விட, ஜனனி பேசியதை கேட்ட மணி, நீ சொல்லப்போகும் உண்மையால் சரவணன் உயிருக்கு தான் ஆபத்து வரும், ஏற்கனவே அவனுக்கு ஒரு முறை திருமணம் நின்றுவிட்டது என மிரட்டி ஜனனியை சமாளிக்கிறான்.

பின்னர் சந்தியா எழுதிய கடிதம் சரவணன் கையில் கிடைக்கிறது. அவனுக்கு படிக்கத் தெரியாததால் அதை தூக்கிப் போட்டு விடுகிறான். அந்த கடிதம் மீண்டும் சந்தியாவிடமே வந்து சேர்கிறது. அதை யாருக்கும் தெரியாமல் அவள் மறைத்து வைத்துக் கொள்கிறாள்.

திருமணத்திற்கு வந்த சந்தியாவின் ஆசிரியல், ’உன்னுடைய லட்சியம் என்னானது? சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தாயே, இவ்வளவு வேகமாக திருமணம் செய்து கொள்வாய் என்று நான் நினைக்கவேயில்லை’ என்றார். மேலும் தொடர்ந்த அவர், ‘ஒண்ணும் பிரச்னையில்லை, நீ என்ன படிக்கணும்ன்னு நினைக்கிறியோ, அத உன் கணவ்ர கிட்ட சொல்லி படி’ என்கிறார். இதனால் சந்தியாவுக்கு உற்சாகம் பிறக்கிறது.

ரஷ்ய தமிழ் அறிஞர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி திடீர் மரணம்

பேசி முடித்த பின்பு மணமக்கள் மண மேடைக்கு செல்லும் சரவணனுக்கும், சந்தியாவுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெறுகிறது. தனது கனவை கணவனிடம் கூறி, எப்போது அதை நிறைவேற்றுவாள் சந்தியா? பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv raja rani 2 sandhya saravanan marriage tamil serial news

Next Story
’ஷிவானிக்கு இருக்க ஒரே வேலை பாலாவ எண்டெர்டெயின் பண்றது தான்!’Bigg Boss Tamil 4 Promo 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com