நிஜ வாழ்விலும் இணையும் சீரியல் ஜோடி: போட்டு வாங்கிய அர்ச்சனா

கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜோடியாக இணைந்த சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி இந்த ஆண்டு விரைவில் நிஜவாழ்விலும் திருமணம் செய்துகொண்டு ஜோடியாக இணைய உள்ளதை இருவரும் தெரிவித்துள்ளனர்.

vijay tv, raja rani 2 serial, raja rani 2 hero sidhu to marry shreya anchan, sidhu to marry shreya anchan soon, ராஜா ராணி 2, சித்து, ஸ்ரேயா அஞ்சன், விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், கலர்ஸ் தமிழ், திருமணம், colours tamil, thirumanam serial, sidhu shreya anchan, sidhu, shreya anchan, அர்ச்சனா, archana, bigg boss archana

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜவாழ்விலும் திருமணம் செய்துகொண்டு இணைய உள்ளதை நடிகை அர்ச்சனா டிவி நிகழ்சியில் போட்டு வாங்கியிருக்கிறார்.

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். திருமணம் சீரியலில் ஹீரோவுக்கு திருமணத்துக்கு முன் ஒரு காதல் இருந்தது என்று மனைவிக்கு தெரியவர இந்த திருமணம் விவாகரத்து வரை செல்லும். ஆனால், ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே மீண்டும் எப்படி காதல் மலர்கிறது என்பதுதான் கதையாக இருந்தது. இந்த தொடருக்கு சீரியல் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்து வந்த சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் நிஜமாகவே காதலிக்க தொடங்கினார்கள். இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே கூறிவந்தனர்.

இந்த சூழலில்தான் நடிகர் சித்து திருமணம் சீரியலில் சித்து நடித்துக் கொண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதனால் திருமணம் சீரியல் உடனடியாக முடிக்கப்பட்டது.

நடிகர் சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசா உடன் ஜோடியாக நடித்து வருகிறார். கலர்ஸ் டியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் முடிந்தாலும் சித்துவும் ஸ்ரேயா அஞ்சனும் காதலர்களாக தொடர்ந்தனர்.

அண்மையில், விஜய் டிவி நடத்திய காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் ‘காதலே காதலே’ நிகழ்ச்சியில் சித்துவும் ஸ்ரேயா அஞ்சனும் ஜோடியாக பங்கேற்றனர். இவர்களுடன் பல சின்னத்திரை காதல் ஜோடிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அர்ச்சனா, அவர்களிடம் சித்துவுக்கும் ஸ்ரேயா அஞ்சனுக்கும் எப்போது திருமணம்? என்று கேட்டார். அதற்கு இருவரும் ‘இந்த வருஷம் தான்.. பார்த்துட்டு இருக்காங்க. தேதி மட்டும் சொன்னாங்கனா.. ‘ என சந்தோஷமும் வெட்கமும் தவழ பதில் அளித்திருக்கிறார்கள்.

கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜோடியாக இணைந்த சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி விரைவில் நிஜவாழ்விலும் திருமணம் செய்துகொண்டு ஜோடியாக இணைய உள்ளதை இருவரும் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv raja rani 2 serial hero sidhu will marry shreya anchan soon

Next Story
குக் வித் வித் கோமாளி நடிகை ஷாக்: அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்தது யார்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com