Advertisment

Vijay TV Serial: சந்தியாவுக்கு புருஷனை சமாதானப்படுத்த ஐடியா கொடுத்த மாமியார் சிவகாமி!

சிவகாமியின் தோழி கவிதா, “வேற வழியில்லையே சிவகாமி, நாம் இப்படி சாம்பிரானி போட்டுதானே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார். இதை சந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

author-image
WebDesk
New Update
vijay tv, tamil tv serial news, raja rani 2, raja rani 2 serial news, raja rani 2 serial today episode story, விஜய் டிவி, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், ஆல்யா மானசா, சிவகாமி, சரவணன், அர்ச்சனா, raja rani 2 serial today episode story update, raja rani 2 serial today episode news, alya manana, sandhya, saravanan, archana, sendhil

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் பரப்பரப்பான கட்டங்களை அடைந்து வருகிறது, அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், “எனக்கு இந்த வீட்ல இருக்கிறவங்க மேல நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிகிட்டே வருது.” என்று சரவணன் சொன்னதை சந்தியா நினைத்துப் பார்கிறாள்.

சரவணன், சந்தியாவை சாப்பாடு எடுத்துக்கொண்டு வரவேண்டாம் என்று சொன்னபோது, சிவகாமி புருஷனுக்கு சாப்பாடு எடுத்துகொண்டு போறதால பொண்டாட்டிக்கு என்ன கஷ்டம், ஏன் சந்தியாவை சாப்பாடு கொண்டுவர வேண்டாம்னு சொல்ற? என்று கேட்டதை நினைத்துப் பார்க்கிறாள்.

ஸ்வீட் கடையில் பத்திரிகை கொடுக்க வந்த நண்பன், படித்த பெண்ணை கல்யாணம் செய்தால், வேலைக்கு போய் நம்மை மதிக்க மாட்டாங்க, நாம கம்பல் பண்ணி வீட்ல உட்க்கார வைச்சா வேண்டா வெறுப்பாதான் இருப்பாங்க, நம்ம கூட அவங்களால சந்தோஷமாக வாழ முடியாது என்று கூறியபோது, சரவணன் 100 சதவீதம் உண்மை என்று கூறியதை சந்தியா நினைத்துப் பார்க்கிறாள்.

சரவணன், தன்னிடம் முகம்கொடுத்து பேச மாட்டேங்கிறார் என்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால், சரவணன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று சந்தியா புரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறாள். எப்படி இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறாள்.

நேர்ல பேசலாம் என்று கடைக்கு போனால் நிறைய பேர் வந்துகொண்டிருக்கிறார்கள், பேச முடியவில்லை. போன் பண்ணி பார்ப்போம் என்று சந்தியா போன் செய்கிறாள். பல முறை போன் செய்து போன் எடுக்க மாட்டேங்கிறான். அண்ணி போன் பண்றாங்க ஏன் எடுக்க மாட்டேங்கிறீங்க என்று கடை பையன் கேட்டபோது சரவணன் அவனை உன் வேலையைப் பாரு என்று திட்டுகிறான். பிறகு போன் எடுத்து, சீசன் டைம் வேலையாக இருப்பதாகக் குறுகிறான். சந்தியாவும் சரி பிஸியா இருக்கீங்க போல வீட்டுக்கு வாங்க பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு போனை வைக்கிறாள்.

publive-image

சந்தியா போனில் பேசிய பிறகு, அருகே வந்து நிற்கும் மாமியார் சிவகாமி, என்னம்ம புருஷன்கூட பேச்சுவார்த்தை எல்லாம் முடிச்சிட்டியா? என்று கேட்கிறார். அதற்கு சந்தியா சும்மாதான் போன் பண்ணேன். வேலை இருக்குனு சொல்லிட்டு போன் வச்சிட்டார் அத்தை என்று கூறுகிறாள். அதற்கு சிவகாமி சும்மா நொய் நொய்னு போன் பண்ணா என்ன பண்ணுவான் அவன், ஏன் உங்கிட்ட இவ்வளவு கோபமா நடந்துக்கிறான்னு போன் பண்ணி கேட்கப் போறியா, இல்லை அவனைப் பத்தி அவங்கிட்டயே குறை சொல்லப் போறியா, ஏன் விலகி போறன்னு கேட்கப் போறீயா? என்று கேட்கிறார். சந்தியா, அதற்கு இல்ல அத்தை சும்மாதான் என்று பதிலளிக்கிறாள்.

தொடர்ந்து பேசும் சிவகாமி, “வேற என்ன, சந்தியா, இங்க என்ன நடக்குதுன்னு ஓவ்வொன்னுத்தையும் நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். சரவணன் எங்களைக்கூட பகைச்சுக்கிட்டு உன் பக்கம் நின்னவன். ஆனால், இன்னைக்கு அவன் விலகிப் போறான்னா அவன் மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். அதற்காக நீ என்னப் பண்ண, எனக்கு சரவணனைப் பற்றி நல்லா தெரியும். அவன் தெரியாமல் கூட யார் மனசையும் காயப்படுத்தனும்னு நினைக்ககூட மாட்டான். ஒரு பிரச்னையில முதலில் விட்டுக்கொடுத்து போறவன் அவனாத்தான் இருப்பான். ஆனால், உங்கிட்ட மட்டும் முறைச்சுகிட்டு இருக்கான்னா, அப்போ தப்பு யார் மேல இருக்கு, இங்க பாரு சந்தியா அவன் சந்தோஷமா நல்லபடியா வாழனும்னுதான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். இப்படி தினம் தினம் மனசுக்குள்ளயே அழுதுகிட்டிருக்கிறதுக்காக இல்லை. நீ வாய்க்கு வந்ததை எதையெதையோ சொல்லி அவனைக் காயப்படுத்தி அனுப்புற, அவன் கடைக்கு போய் வியாபாரம் பார்க்கிறவன், நாலு எடத்துக்கு போயிட்டு வர்றவன். இதெல்லாத்தையும் நினைச்சுக்கிட்டே இருந்தா மனசு தாங்குமா? இல்லை உடம்புதான் தாங்குமா? இங்க பாருமா நான் அவனுக்கு கல்யாணம்தான் பண்ணி வச்சேன். கைகழுவி விடல.. ஏம் புள்ளைக்கு உன்னால சந்தோஷம் இல்லைனாகூட பரவாயில்லை. கொஞ்சமாச்சும் அவனை நிம்மதியா இருக்கவிடுமா” என்று கூறிவிட்டு செல்கிறார்.

வீட்டில் சிவகாமி சுத்தம் செய்துகொண்டிருக்கிறார். அப்போது, மயிலு சரவணனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வருகிறாள். சரவணனுக்கு சாப்பாடு கொடுத்துட்டியா என்று கேட்கிறார். மயிலு சாப்பாடு கொடுத்துவிட்டதாகக் கூறுகிறாள்.

அப்போது, பக்கத்துவீட்டு பெண் வருகிறார். அவர் ஒரு கப்பில் எடுத்துவந்த கேசரியை சிவகாமியிடம் கூறுகிறார். சிவகாமி, “உன் மருமக பிரசவத்துக்கு போயிருக்கிறா இல்லை அதற்குதானே இந்த ஸ்வீட்” என்று கேட்கிறார். வீட்டுக்கு வந்துள்ள பக்கத்துவீட்டு பெண்ணும் ஆமாம் என்று கூறுகிறார்.

சிவகாமி, பேரனா பேத்தியா என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண், “பேத்திதான் சிவகாமி, அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு எங்களுக்கு கல்யாணநாள் வேற, கோயிலுக்கு போயிருந்தோம் அப்போதான் போன் வந்தது.” என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி ரெண்டு மடங்கு சந்தோஷம் தான என்று கேட்கிறார். அதற்கு அவரும், ஆமாம், நான் முதல்ல நீ ஒன்னுக்கு ரெண்டு புள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்ட அதனால நீதான் முதல்ல பாட்டியாவன்னு நினைச்சேன் என்று கூறுகிறார். இதைக்கேட்டு முகம் வாடிப் போகும் சிவகாமி நாம மட்டும் ஆசைப்பட்டு என்ன பண்றது, இந்த புள்ளைங்க என்னமோ தள்ளிப் போட்டுகிட்டே இருக்குதுங்க என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண், “என்ன சிவகாமி, நீதான் அவங்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதுதான, நம்ம சந்தியாவுமா அப்படி இருக்கா, சரவணனையும் சந்தியாவையும் பார்த்தா சந்தோஷமான ஜோடியாதான தெரியுது என்று கேட்கிறார்.

அதற்கு சிவகாமி நான் அப்படிதான் நினைச்சுகிட்டு இருந்தேன். இப்ப பாரு, சரவணன் சாப்பாட்டைகூட சந்தியாகிட்ட கொடுத்துவிட வேணாம்னு சொல்றான் என்று கூறுகிறார். இதைக்கேட்டு சந்தியா வருத்தப்படுகிறாள். இதைக் கேட்டு, என்னால நம்பவே முடியலை சிவகாமி என்று அந்த பெண் கூறுகிறார். அப்போது சந்தியா இருப்பதை தெரிந்துகொண்ட சிவகாமி அப்படிதான்னு நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

publive-image

இந்த காலத்து பிள்ளைங்க ஏதாவது ஒன்னுன்னா மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு இருக்குதுங்க. என்னன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க, புருஷன் பொண்டாட்டினா சந்தோஷம், சண்டை, துக்கம் எல்லாம் இருக்கத்தான் செய்யும் என்று பக்கத்துவீட்டு பெண் கூறுகிறார். அதற்கு சிவகாமி, “அந்த காலத்துல நானும் எங்க வீட்டுகாரரும் போடாத சண்டையா, ஏதாவது சண்டைனா அவரு வேலைக்கு போய்விட்டு சாயந்தரம் வீட்டுக்கு வர வரைக்கும் குளிக்காம கொள்ளாம உம்முனு இருப்பேன். தண்ணீர் மொண்டு கொடுத்தால்கூட குடிக்க மாட்டார். ஆனால், ரெண்டு நாளைக்கு மேல அவர் தாங்க மாட்டார். அவரே வந்து காபி கொடேன், டீ கொடேன்னு கேட்பார். பிறகு நானும் கோபம் குறைஞ்சு குளிச்சிட்டு தலை நிறைய மல்லிப்பூ வச்சுகிட்டு, வீட்ல சாம்பிரானி போட்டு வைப்பேன்.” என்று கூறுகிறார்.

அதற்கு, சிவகாமியின் தோழி கவிதா, “வேற வழியில்லையே சிவகாமி, நாம் இப்படி சாம்பிரானி போட்டுதானே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார். இதை சந்தியா கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

தொடந்து பேசும் சிவகாமி, “நாங்க சண்டை போட்டதும் தெரியாம 2 நாளில் சமாதானம் ஆகிவிடுவோம். ஆனால், கவிதா இப்ப இருக்கிற பிள்ளைங்களுக்கு சண்டை போடவும் தெரியல, சமாதானம் ஆகவும் தெரியல” என்று சந்தியாவுக்கு சாடையாக சொல்கிறார்.

அதற்கு கவிதா, “சரி விடு சிவகாமி, என் வீட்டு சந்தோஷத்தை சொல்ல வந்த நேரத்துல உன் வீட்லயும் சீக்கிரமா சந்தோஷம் வரும்” என்று கூறுகிறார். பிறகு, ஊருக்கு போய் 2-3 நாள் கழிச்சுதான் வருவேன். வீட்டை கொஞ்சம் பார்த்துக்க சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார். சிவகாமியும் சரி என்று மருமகளை விசாரித்ததாக சொல்லச் சொல்கிறார்.

இதைக் கேட்ட சந்தியா குளிப்பதற்காக செல்கிறாள். அப்போது, சிவகாமி ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறாள். இல்லை குளிக்கப் போகிறேன் என்று கூறுகிறாள். அதற்கு சிவகாமி, காலையிலதான் குளிச்ச இல்ல, இப்போ என்ன என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா, தயக்கத்துடன் “இல்லை அத்தை, அவர் வேலை முடிச்சுட்டு லேட்டா வருவாரு, நான் அழுதுவடிஞ்சுகிட்டு இப்படி இருந்தா நல்லா இருக்காது. அதான், ஃபிரஷ்ஷாகிட்டு வரலாம்னு” என்று கூறிவிட்டு செல்கிறாள். சந்தியா சொன்னதைக் கேட்டு சிவகாமி சந்தோஷம் அடைகிறாள். சந்தியா, அறைக்குள் சென்று அத்தை சொன்னது மாதிரி செய்ய வேண்டும் அப்போதுதான் என்ன பிரச்னைனு அவரிடம் கேட்கவாவது செய்யலாம் என்று பீரோவைத் திறந்து சேலையை எடுக்கிறாள். அப்போது ஒரு புது சேலை இருப்பதைப் பார்த்து இது நம்மளோடது இல்லையே. சரவணன் நமக்கு தருவதற்கு சஸ்பெண்ஸாக வாங்கி வைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறாள். ஆனால், இதை கட்டிக்கொண்டு நாம் அவருக்கு சஸ்பெண் கொடுக்க வேண்டும் என்று குளித்துவிட்டு புது சேலையைக் கட்டிக்கொண்டு வீடு முழுக்க சாம்பிரானி போடுகிறாள்.

publive-image

இதை பார்த்த சிவகாமி சந்தோஷத்துடன் என்ன சந்தியா வீட்ல சாம்பிரானி எல்லாம் போட்டிருக்க என்று கேட்கிறாள். சந்தியா என்ன சொல்வது என்று தெரியாமல், “இல்ல நான் இப்பதான் குளிச்சேன், வீடும் வாசனையா இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு அதான் போட்டேன்” என்று கூறுகிறாள். அதற்கு சிவகாமி, “பரவாயில்ல பரவாயில்ல, கூட இன்னும் கொஞ்சம் சாம்பிரானி போட்டாலும் தப்பில்லை பண்ணு பண்ணு” என்று கூறிவிட்டு மனதுக்குள் சந்தோஷத்துடன் செல்கிறார்.

சந்தியா வாசலுக்கு வந்து ஏன் சரவணன் இன்னும் வரவில்லை என்று வாசலிலேயெ உட்கார்ந்து காத்திருக்கிறாள். வெகுநேரம் காத்திருந்துவிட்டு உள்ளே செல்கிறாள்.

அடுத்த காட்சியில் இரவில், அர்ச்சனா, டீ எடுத்து வந்து செந்திலுக்கு தருகிறாள். 2வது டோஸ் தடுப்பூசி எப்போது என்று கேட்கிறான். அதற்கு அர்ச்சனா அடுத்த வாரம் என்று சொல்கிறாள். செந்தில், “மிஸ் பண்ணாம போட்டுவிட வேண்டும். 3வது அலை வேற வருதாம்” என்று கூறுகிறான்.

இதைக் கேட்ட அர்ச்சனா, “என்னங்க இது இந்த கொரோனாவுக்கு ஒரு எண்டே கிடையாதா, கடல்ல வர வலை மாதிரி அலைஅலையா அதும்பாட்டுக்னு வந்துகிட்டே இருக்குது.” என்று கூறுகிறாள். அதற்கு செந்தில், “ஆமாம், எப்போதான் இதெல்லாம் முடிஞ்சு உலகம் நார்மலா ஆகும்னே தெரியல” என்று கூறுகிறான். அதற்கு அர்ச்சனா, “உலகத்தை விடுங்க இந்த வீட்ல ஒன்னு நார்மலா இல்லையே கவனிச்சிங்களா? சந்தியாவும் உங்க சரவணனும் அதே மாதிரி இல்லையே, அதை நீங்க கவனிக்கலையா” என்று கேட்கிறாள். அதற்கு செந்தில், “அதான் தெரியுதே, இரும்பும் காந்தமுமா ஒட்டிகிட்டு திரிவாங்க, இப்ப என்னன்னா விலகி இல்ல போறாங்க” என்று கூறுகிறான்.

அதற்கு அர்ச்சனா, “தப்புங்க, உங்க சந்தியா விலகிப் போகல, உங்க அண்ணந்தான் விலகிப் போறாரு.” என்று கூறுகிறாள்.

அதற்கு, செந்தில், “அவன், இந்த உலகமே என் பொண்டாட்டிதான்னு இருந்தான், இந்த தென்காசியிலயே இவனை மாதிரி ஒரு பொண்டாட்டி தாசன் இல்லைனு நினைச்சுகிட்டு இருந்தேன். இவன் ஏன் இப்படி ஆனான்” என்று கேட்கிறான். அதற்கு அர்ச்சனாவும், “அதான் எனக்கும் தெரியல,” என்று கூறுகிறாள். அப்போது, செந்தில் தம்பி ஆதியும் பார்வதியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

செந்தில், “புருஷன் பொண்டாட்டிக்கு இடையே சண்டை வரும் அதுபோல ஒரு சண்டையாக இருக்கும். எல்லாம் கொஞ்சநாள் போனால் சரியில்லை.” என்று கூறுகிறான்.

அப்போது, ஆதியும் பார்வதியும் வந்து உட்கார்கிறார்கள். அப்போது செந்தில் நாங்க பேசுவதை ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்தீர்களா? என்று கேட்கிறான். அதற்கு பார்வதி, இல்லை நாங்க நீங்க பேசறதை யாரும் ஒட்டு கேட்கக்கூடாதுனு பார்த்துகிட்டு இருந்தோம் என்று கூறுகிறாள். ஆதியும், நீங்க பேசுவது சந்தியா காதில் விழுந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்கிறான். ஆதி, “சரவணன் அண்ணனும் சந்தியா அண்ணியும் ஏன் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க” என்று கேட்கிறான்.

அதற்கு அர்ச்சனா, அது எங்களுக்கும் தெரியாமல்தானே பேசிகொண்டிருக்கிறோம் என்று கூறுகிறாள். அதை ஏன் அண்ணன்கிட்டயே கேட்கக் கூடாது என்று ஆதி கேட்கிறான். அதற்கு அர்ச்சனா, உங்க அண்ணன் சரியான கல்லுலி மங்கன், சந்தியாவை விட்டுக்கொடுக்கவே மாட்டார் என்று கூறுகிறார். செந்தில், “என்ன நடந்தாலும் வெளியே தெரியத்தானே வரும். அப்போ பார்த்துக்கலாம்” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள்.

சரவணன், இரவும் மிகவும் நேரமாகி வீட்டுக்கு வருகிறான். வீடு பூட்டி இருக்கிறது. சந்தியா பிரிந்து போக விரும்புகிறாங்க. அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். கதவைத் திறந்து உள்ளே போக வேணாம். இங்கே இருந்துவிடலாம் என்று திரும்ப போய்விடுகிறான். சந்தியா, வெளியே வந்து பார்க்கிறாள். சரவணன் இன்னும் வராததை நினைத்து கவலைப்படுகிறாள். அப்போது, அருகே வந்து நிற்கும், சிவகாமி, என்ன ஆச்சு இந்த சரவணனுக்கு இன்னுமா வீட்டுக்கு வரல என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்து, “என்ன சந்தியா சரவணன் இன்னும் வீட்டுக்கு வரலயா என்று கேட்கிறார்.

அதற்கு சந்தியா, இன்னும் வரல அத்தை, போன் பண்ணேன் வரன்னு சொன்னாரு என்று கூறிவிட்டு, உள்ளே சென்று, யாருக்காக இந்த புது புடவையை கட்டினோமோ அவரே வரல என்று கூறிவிட்டு. மீண்டும் பழைய புடவையை கட்டிக்கொள்கிறாள். சரவணன் இன்னும் ஏன் வரவில்லை என்று யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Serial 2 Raja Rani 2 Raja Rani Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment