விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஹர்ஷலா தொழிலதிபர் அரவிந்த் என்பரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டிவியின் சந்திரலேகா தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஹர்ஷலா தொடர்ந்து எடியூர் ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரா (ஞானம்பே) உள்ளிட்ட சீருியல்களில் நடித்துள்ளார். இது தவிர, பிருங்கதா பென்னேரி, நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, சஞ்சு மாட்டு மற்றும் காவேரி போன்ற பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் யாரே நீ மோகினி மற்றும் உகே உகே மாதேஸ்வரா நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றார்.
தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார், இவரது திருமணம் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டள்ள ஹர்ஷலா, “என் கணவனை அறிமுகப்படுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் கோமதி பிரியா, வெற்றி வசந்த் தமிழ்செல்வி, ஸ்ரீ தேவா, யோகேஷ், ஏ ரேவதி மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் கலந்து கொண்டனர். சென்னையில் திருமணம் நடைபெற்றது. சீறகடிக்க ஆசை சீரியல் கடந்த ஜனவரி 2023 இல் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் கோமதி பிரியா மற்றும் வெற்றி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர். சௌந்தரராஜன், அனிலா, நரசிம்ம ராஜு, தமிழ்செல்வி, ஸ்ரீ தேவா, ஏ ரேவதி, திவாகர் உள்ளிட்ட ஒரு குழும நடிகர்களும் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“