தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அனைவருமே அவ்வப்போது தங்கள் சீரியல் படபிடிப்பு தளங்களில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோவாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவிட்டு வருகின்றனர். இவ்வகையான வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் அவ்வப்போது பேசு பொருளாகும்.
அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் எழில் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். இவர் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டவர். முதனமை கதாபத்திரமான ’பாக்கியலட்சுமி’யில் சுசித்ரா நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் பெரிய வரவேற்பை பெறாத இந்த சீரியல் அம்மா- மகன் பாசம் பிரதானமாக இருந்ததால் நாளடைவில் வரவேற்பை பெற்று தற்போது செம ஹிட்டாக ஒடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், விஷால் படபிடிப்பு தளத்திலிருந்து லைவ் வீடியோவிற்கு வந்தார். அப்பொழுது அழுகிற காட்சியில் நடித்துக்கொண்டிருந்த சுசித்ரா, விஷாலின் லைவ் வீடியோவில் வந்து பேசிக்கொண்டிருக்கும் போதே அழுதார். லைவ்வில் இவ்வளவு தத்ருபமாக அழுகிறாரே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil