Advertisment

சுஜிதா, ஹேமா, காவியா... விஜய் டி.வி தேவதைகளில் டாப் சம்பளம் யாருக்கு?

வார நாட்களில் சீரியல்கள் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் என ரசிகர்களை டிவியின் முன்பு கட்டிப்போடுவதில் சேனல்களுக்கு முக்கிய பங்கு உண்டு

author-image
WebDesk
New Update
சுஜிதா, ஹேமா, காவியா... விஜய் டி.வி தேவதைகளில் டாப் சம்பளம் யாருக்கு?

சின்னத்திரை நிகழ்ச்சிகள் தற்போது இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. வார நாட்களில் சீரியல்கள் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் என ரசிகர்களை டிவியின் முன்பு கட்டிப்போடுவதில் சேனல்கள் பம்பரமாக உழைத்து வருகின்றன.

Advertisment

இந்த உழைப்பு ஏற்றார்போல் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர். அதேபோல் அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் சம்பளமும் அதிகம் ஒரு மாதத்திற்கு தேவையான எபிசோடுகளை 15 நாட்களில் முடித்துவிடுவதான் சீரியலின் முக்கிய பணி. அதேபோல் நடிகைகளுக்கு சம்பளமும் எபிசோடுகளை கணக்கிட்டுதான் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் விஜய் டிவி நடிகைகள் பெரும் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் (எபிசோடு அடிப்படையில்)

சுஜிதா தனுஷ் ரூ 12 ஆயிரம், ஹேமா ராஜ்குமார் ரூ 6,500, காவியா  அறிவுமணி ரூ 4,500, சாய் காயத்ரி ரூ 5,000

நாம் இருவர் நமக்கு இருவர்

ரக்ஷிதா மகாலட்சுமி ரூ 10,000, காயத்ரி ரூ 5,500, ஜனனி ரூ 4,000 இதில் ரக்ஷிதா தொடரில் இருந்து பாதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தென்றல் வந்து என்னைத் தொடும்

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை பவித்ரா ஒரு எபிசாடுக்கு ரூ 8,000 சம்பளமாக பெறுகிறார்.

பாவம் கணேசன்

நேஹா கௌடா ஒரு எபிசோடுக்கு ரூ 6,000

வேலைக்காரன் சீரியலில் நடித்து வரும் கோமதி ப்ரியா ரூ 4,000 ராஜபார்வை சீரியலில் நடித்த ராஜ்மி ஜெயராஜ் ரூ 6,000 , மௌனராகம் ரவீனா ரூ 6,000,

ராஜா ராணி 2

ஆல்யா மானசா ரூ 13,000, அர்ச்சனா ரூ 4,500, தற்போது ஆல்யா மானசா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

ரோஷ்னி ஹரிப்பிரியன் ரூ 15,000, ப்ரீனா ஆசாத், ரூ 10,000, இதில் தற்போது ரோஷ்னி ஹரிப்பிரியன் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி

சுசித்ரா, ரூ 9000, ரித்திகா, ரூ 4500, திவ்யா கனேஷ், ரூ 4500, நேஹா ரூ 3000 சம்பளமாக பெறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment