Advertisment

Vijay TV serial பாக்கியா வீட்டிற்குள் ராதிகா… வெளியில் கோபி… சிக்குவாரா?

Vijay TV bakiyalakshmi serial gopi wait outside while radhika in bakiya home: ராதிகாவை தன் வீட்டிற்குள் அனுப்பிவிட்டு, வெளியில் காத்திருக்கும் கோபி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV serial பாக்கியா வீட்டிற்குள் ராதிகா… வெளியில் கோபி… சிக்குவாரா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். நேற்றைய எபிஷோடில், அம்ரிதா திருமணமானவள் என்று தெரிந்து அதிர்ச்சியாகிறான் எழில், ராஜேஷிடம் சண்டையிடுகிறான் கோபி.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கதவைத் தட்டி கோபியை வெளியே கூப்பிடும் ராஜேஷ், கோபி வெளியே வராததால் கோபமாக கிளம்புகிறான். வீட்டுக்குள்ளே ராதிகா கோபியை சமாதனப்படுத்துகிறாள். நா இங்க வருவது உனக்கு பிரச்சனையா இருக்கா என கோபி கேட்க, பிரச்சனை அது இல்லை என்கிறாள் ராதிகா. அப்போது ராதிகாவுக்கு போன் செய்கிறாள் சுமி. வீட்டுக்கு கோபி வருவது பற்றியும், ராஜேஷ் வந்து சண்டையிடுவது பற்றியும் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்வதாக சொல்கிறாள் சுமி. மேலும் வீட்டை காலி பண்ணவும் சொல்கிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறாள் ராதிகா.

கோபியோ என்னால் தான் உனக்கு எல்லா பிரச்சனையும் என வருத்தப்படுகிறான். ஆனாலும் நா உன்ன விட்டு போகமாட்டேன் என்று ஆறுதல் சொல்கிறான் கோபி. ராஜேஷால் உனக்கு உள்ள பிரச்சனை இங்க யாருக்கும் தெரியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே உனக்கு ஒரு வீடு வாங்கிரலாம் என்று சொல்லி, மயூவை கூப்பிட ராதிகாவை அழைத்துச் செல்கிறான். போகும் வழியில் வழி தெரியாத மாதிரி நடிக்கிறான் கோபி. உங்க வீடு இந்த ஏரியா தானே என ராதிகா கேட்க, பதறிப் போகும் கோபி என் வீடு அந்த பக்கம் இருக்கு எனச் சொல்லி சமாளிக்கிறான்.

பின்னர் இரண்டு வீடு தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு நீ போய் மயூவை கூட்டி வா என கோபி சொல்கிறான். நீங்களும் வாங்க என கூப்பிடும் ராதிகாவிடம் நா உன் கூட வந்த உன்ன தப்பா நினைப்பாங்க வேணாம் என சொல்லி மறுக்கிறான்.

பின்னர் பாக்கியலட்சுமி வீட்டிற்குள் செல்கிறாள் ராதிகா. எல்லோரும் அவளை அன்பாக வரவேற்கிறார்கள். மயூ இங்க இருக்குறது எங்க எல்லோருக்கும் சந்தோஷமா இருக்கு என சொல்கிறார்கள். மயூ தன்னை நினைத்து கவலைபடுவதாக ராதிகா சொல்கிறாள். ராஜேஷால் இந்த வீட்டையும் காலி பண்ண வேண்டியுள்ளது, எனவே புதுசா ஒரு வீடு வாங்க போறேன் என்கிறாள். அதற்கு பாக்கியா எங்க வீட்டுக்கு பக்கத்திலே ஒரு வீடு இருக்கு நீங்க இங்கேயே வந்துருங்க என சொல்கிறாள். அப்போது கோபியின் அப்பா உன்ன ரொம்ப வருசத்துக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்கிறார். அப்போது அங்கு மயூ வருகிறாள். எதாவது சாப்பிட்டு போகலாம் எனச் சொல்லும் பாக்கியாவிடம் ஒரு ஃபிரண்ட் கூட வந்தேன் அவரு வெளியில் வெயிட் பண்றார் என சொல்கிறாள் ராதிகா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment