Advertisment

Vijay TV Serial; ஹேமாவை கடத்தியதாக கைதாகும் கண்ணம்மா… சந்தோஷத்தில் வெண்பா

Vijay TV barathikannamma serial today episode kannamma arrested for hema kidnapping: ஹேமாவை கடத்தும் வெண்பா, கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு அவள் மீது கம்ப்ளைண்ட் கொடுக்கும் பாரதி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ஹேமாவை கடத்தியதாக கைதாகும் கண்ணம்மா… சந்தோஷத்தில் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

தண்ணீர் வாங்க போன நேரத்தில் ஹேமாவை காணோம் என்று பாரதி தேடிக் கொண்டிருக்க, ஒரு ஆட்டோவில் ஏறி செல்கிறாள் கண்ணம்மா. இதைப் பார்க்கும் பாரதி, கண்ணம்மா தான் ஹேமாவை கடத்தி விட்டதாக நினைக்கிறான். ஆட்டோவைத் துரத்தி செல்லும் பாரதி, இடையில் ஒரு கார் வர ஆட்டோவை தவறவிடுகிறான்.

அடுத்ததாக, ஹேமாவை ஒரு காரில் நான்கு பேர் கடத்திச் செல்கிறார்கள். அவர்களிடம் தன்னை விட்டுவிடும் படி ஹேமா அழுது கெஞ்சுகிறாள். அவர்கள் ஹேமாவை ஒரு குடோனுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைக்கின்றனர். பின்னர் அவர்களில் ஒருவன் வெண்பாவுக்கு போன் செய்து ஹேமாவை கடத்திவிட்டதாக கூறுகிறான். சந்தோஷப்படும் வெண்பா, ஹேமாவை நான் சொல்ற வரை அங்கேயே வச்சுருங்க என கூறுகிறாள். பின்பு போனை வைத்துவிட்டு, சாந்தியிடம் ஹேமாவை கடத்தி விட்டதால் பாரதி அமெரிக்கா போக முடியாது என சந்தோஷமாக சொல்கிறாள். சாந்தி அடுத்து என்ன பண்ண போறீங்க என கேட்க, அதற்கு வெண்பா பாரதி குடும்பம் என்ன செய்ய போகுது பார்ப்போம் என்கிறாள். மேலும், ஹேமா வந்த பின் பாரதிக்கு என் மேல அக்கறை இல்லாம போச்சு, இப்ப அவளுக்காக அமெரிக்கா வேற போறானாம், அதான் தூக்கிட்டேன், அடுத்து ஹேமாவ வட இந்தியா போற டிரெயின்ல ஏத்தி விட வேண்டியது தான் என்கிறாள்.

publive-image

அடுத்ததாக, கோபத்தோடு கண்ணம்மா வீட்டுக்கு வரும் பாரதி, கண்ணம்மா இல்லாததால், அங்குள்ள பூச்செடிகளை உடைக்கிறான். பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க செல்கிறான். போலீஸ் ஸ்டேசனில், சமையல் அம்மா ஹேமாவை கடத்திவிட்டதாக கூறுகிறான். அவ வீட்டுக்கு கூட போய் பார்த்தேன் அங்க இல்ல எனவும் சொல்கிறான் பாரதி. கடத்துனவங்கள உங்களுக்கு தெரியுமா என கேட்க, அதற்கு பாரதி அவ என் பொண்டாட்டி என்கிறான். உடனே போலீஸ் புருசன் பொண்டாட்டி சண்டையா என கேட்க, உடனே பாரதி, ஹேமா அவளோட குழந்தையில்ல, 8 வருஷத்துக்கு முன்னாடி நாங்க பிரிஞ்சிட்டோம். நா ஹேமாவ தத்தெடுத்து வளர்க்குறேன், இப்ப ஹேமாவ என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறா என சொல்ல கம்ப்ளைண்ட் எழுதி தர சொல்கிறார்கள் போலீஸ் ஸ்டேசனில்.

publive-image

அடுத்ததாக, லட்சுமிக்கு சாப்பாடு கொண்டு வருகிறார் ஆட்டோ டிரைவர் குமார். அவரிடம் அம்மா வரலையா என கேட்க, அவங்களுக்கு உடம்பு சரியில்ல அதான் வரலை, நீ நல்ல சாப்பிடு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

publive-image

அடுத்ததாக கண்ணம்மாவும், துளசியும் பூந்தொட்டிகள் எப்படி உடைஞ்ச்சு என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். லட்சுமிக்கு நீ ஏன் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கலை என துளசி கேட்க, பாஸ்போர்ட் ஆபிஸ் வேலை இருந்ததால போக முடியல என்கிறாள். அப்போது சோகமாக இருக்கும் கண்ணம்மாவிடம் என்னாச்சு என கேட்கிறாள் துளசி. எனக்கு இருக்குற ஒரே பிரச்சனை பாரதி தான் என்கிறாள். மேலும் பாஸ்போர்ட் ஆபிஸில் ஹேமாவையும் பாரதியையும் நா பிரிக்க பார்க்குறேனு என்கிட்ட பாரதி சண்டை போட்டான். அங்க இருந்தவங்க எல்லாம் ஒரு மாதிரி பார்த்தாங்க என்கிறாள் கண்ணம்மா. ஹேமா கூட நா பழகுறது அவருக்கு பிடிக்கலனு தான் ஸ்கூல்ல சமைக்குறதையே விட்டுட்டேன், ஆனாலும் திரும்பவும் வந்து தொல்லை பண்றாரு என வருத்தமாக கூறுகிறாள்.

அப்போது கண்ணம்மா வீட்டுக்கு போலீஸ் வருகிறார்கள். வந்து கண்ணம்மாவை ஸ்டேஷனுக்கு அழைக்கிறார்கள். துளசி அதற்கு காரணம் கேட்க, கண்ணம்மா ஹேமாவை கடத்தி விட்டதாக பாரதி கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார், அதனால் விசாரணைக்கு வாங்க என அழைக்கிறார் இன்ஸ்பெக்டர். உடனே பதறிப் போகும் கண்ணம்மா, ஹேமாவ நா கடத்திட்டேனா, ஹேமாவுக்கு என்ன ஆச்சு என்கிறாள். அதற்கு கோபப்படும் இன்ஸ்பெக்டர் ஹேமாவ நீ கடத்திட்டு என்கிட்ட எங்கனு கேக்குறியா என அதட்டுகிறார். உடனே துளசி ஹேமாவ கண்ணம்மாவுக்கு நல்ல தெரியும், அவங்க குடும்பத்துக்கும் கண்ணம்மாவை பத்தி தெரியும் என்கிறாள்.

publive-image

அப்போது கண்ணம்மா, ஹேமா என் பொண்ணு மாதிரி, நா ஏன் அவள கடத்தப்போறேன் என சொல்ல, அதற்கு இன்ஸ்பெக்டர், பாரதி உங்க புருஷன் தானே, அவரே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார், அதனால் விசாரணைக்கு ஒழுங்கா வந்துரு என கண்ணம்மாவை அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment