Advertisment

Vijay TV Serial; தோழிகளின் கடைசி சந்திப்பா இது?... பாரதியின் முடிவு என்ன?

Vijay TV serial barathikannamma today episode lakshmi hema hangouts: குழந்தையை நினைத்து கவலையுடன் இருக்கும் அஞ்சலி, லட்சுமி வீட்டில் விட அழைத்துச் செல்லும் பாரதி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; தோழிகளின் கடைசி சந்திப்பா இது?... பாரதியின் முடிவு என்ன?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

டாக்டர் சொன்னதை நினைத்து கவலையோடு இருக்கிறாள் அஞ்சலி. அதைப் பார்க்கும் சௌந்தர்யா எதுவும் பிரச்சனையா என கேட்கிறாள். அதற்கு அஞ்சலி ஒன்னுமில்லை என்று சமாளிக்கிறாள். பின்னர் சௌந்தர்யா, அவளுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து குழந்தை பெற்றது வரை கூறி, அஞ்சலியை ஊக்கப்படுத்துகிறாள். அஞ்சலி மீண்டும் கவலையாக இருக்க, நீ அம்மா ஆக போற சந்தோஷமா இருக்கனும் என்று சொல்லி, ஜூஸ் எடுத்து வர கிளம்புகிறாள் சௌந்தர்யா.

publive-image

அடுத்ததாக, ஹேமா வீட்டுக்கு வருகிறாள் லட்சுமி. வேணுவும் சௌந்தர்யாவும், என்ன தீடீர்னு வந்துருக்க என கேட்க, ஹேமா அமெரிக்கா போறாள அதான் பார்க்க வந்தேன் என்கிறாள் லட்சுமி. மேலும் சமையல் அம்மா செய்து கொடுத்த ஸ்நாக்ஸையும் காட்டுகிறாள். பின்னர் சௌந்தர்யாவிடம், ஹேமா கண்டிப்பா அமெரிக்கா போகனுமா என கேட்கிறாள். பாரதி தான் இத பத்தி முடிவு செய்யுனும் என்கிறார் வேணு. மேலும் பாரதி இப்படி பண்றது எதுக்குனு தெரியலை என புலம்புகிறார். கண்ணம்மா மேல இருக்குற கோபத்தில் தான் பாரதி, ஒரு பொய்யை நம்பி இப்படி தப்பா முடிவெடுக்குறான் என சௌந்தர்யாவும் புலம்புகிறாள்.

ஹேமாவை சாப்பிட வைக்க முயற்சி செய்கிறாள் அஞ்சலி. ஹேமா மறுத்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு வருகிறாள் லட்சுமி. லட்சுமியை பார்த்ததும், ஹேமா மிகுந்த சந்தோஷமாகிறாள். பாரதியும் அங்கு வந்து ஹேமாவை சாப்பிட சொல்கிறான். ஹேமாவும் லட்சுமியும் ஸ்கூல் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை எல்லோரும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னர் லட்சுமி, ஹேமாவுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்க, பாரதி யார் கொடுத்தது என கேட்கிறான். சமையல் அம்மா செஞ்சு கொடுத்தது என ஹேமாவுக்கு கொடுக்கிறாள் லட்சுமி. ஹேமா நா இத மட்டும் சாப்பிட்டுக்கிறேன் பாரதியிடம் கெஞ்சுகிறாள். எதுவும் சொல்ல முடியாமல் தயங்குகிறான் பாரதி. ஹேமா சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, நா ஆப்பிள் கொடுத்தப்ப சாப்பிடல, இப்ப சமையல் அம்மா செஞ்சு கொடுத்த சாப்பிடுறியா என கிண்டலாக கேட்கிறாள். பாரதி அங்கிருந்து கிளம்ப எழுந்திரிக்கும்போது, சௌந்தர்யா அவனை தடுத்து, லட்சுமி அவளா தான் வந்தா, அவ வந்த உடனே ஹேமா எப்படி சந்தோஷமா மாறிட்டா பாரு, அதனால குழந்தைங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு முடிவெடு என்கிறாள். எதுவும் சொல்லாமல் கிளம்புகிறான் பாரதி.

publive-image

லட்சுமி கிளம்பும்போது பாரதி நா கொண்டுபோய் விடுறேன் என்கிறான். உடனே சௌந்தர்யா வேண்டாம் என தடுக்கிறாள். பாரதி சந்தேகமாக பார்க்க, ஹேமாவுக்கு, உடம்பு சரியில்லை நீ இங்கே இரு என சமாளிக்கிறாள். பாரதி மீண்டும் நா போறேன் என சொல்ல, சௌந்தர்யா உடனே, நா கோவிலுக்கு போறேன் அப்படியே கொண்டுபோய் விட்டுறேன் என்கிறாள். ஆனால் பாரதி, பிடிவாதமாக நானே கொண்டுபோய் விடுறேன் என சொல்லி அழைத்துச் செல்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment