Advertisment

அச்சோ...! பிரியங்காவை குதூகலப்படுத்திய குட்டி ரசிகர்கள்

வால் நிகழ்ச்சியை ஒன்றறை வயது குழந்தை படு ஜாலியாக பார்த்து என்ஜாய் செய்திருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka Deshpande

Priyanka Deshpande

Vijay TV - The Wall : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கேம் ஷோ ‘தி வால்’. இந்த நிகழ்ச்சி இதே பெயரில் பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தாய்லாந்து, வியட்நாம், ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ரஷ்யா என 27 நாடுகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

Advertisment

அமெரிக்காவில் இது ஸ்பானிஷ் மொழியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் ’தி வால்’ என்ற பெயரிலேயே ஒளிபரப்பு செய்யப்பட்டது. 28-வது நாடாக இந்தியாவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30 மாதம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவு

இதனை ம.கா.பா.ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இருவரும் சேர்ந்தாலே அந்த இடத்தை கலகலப்பாக்கி விடுவது இவர்களின் வழக்கம். குறிப்பாக பிரியங்கா எல்லா இடத்திலும் சிரித்தே அனைவரையும் கவர்ந்து விடும் ஆற்றலுடையவர்.

பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அகோரம் வருமாவரித்துறையிடம் ஆஜர்

அந்த வகையில் வால் நிகழ்ச்சியை ஒன்றறை வயது குழந்தை படு ஜாலியாக பார்த்து என்ஜாய் செய்திருக்கிறது. மேலிருந்து பந்து கீழே சரியான அமவுண்டுக்குள் விழுந்ததும், அந்தக் குழந்தையின் கொண்டாட்டம் இன்னும் அதிகமாகிறது. இதனை குழந்தையின் தந்தை பெரோஸ் குமார் என்பவர் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பிரியங்காவை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த பிரியங்கா, ‘அவர்களுக்கு எனது அன்பு’ என அதனை ரீட்வீட் செய்திருக்கிறார். ஆக, குழந்தைகளை வெகுவாக கவர்ந்து விட்டார் பிரியங்கா.

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment