Advertisment

அடடா இத்தன நாள் இது தெரியாம போச்சே... வி.ஜே மணிமேகலை குக்கிங் டிப்ஸ்

திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் தனது கணவருடன் கலந்துக் கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Manimegalai helmet Cooking with her husband

கணவர் உசைனுடன் வி.ஜே.மணிமேகலை

VJ Manimegalai: சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கியவர் வி.ஜே.மணிமேகலை. அங்கு பல லைவ் ஷோ-க்களையும், பிரபலங்களின் நேர்க்காணலையும் தொகுத்து வழங்கிய அவர், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்புகளை மீறி, உசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

Advertisment

சொன்னா நம்புங்க சரத் – ராதிகா செல்ல பையன் வளர்ந்துட்டாரு… பாப் சிங்கர் வேற!

திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் தனது கணவருடன் கலந்துக் கொண்டார். அதோடு ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, பல்வேறு கோமாளி தனங்களை செய்தார். தவிர, விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் தனது கணவருடன் குக்கரில் சமைக்கும் போது, பாதுகாப்புக்காக ஹெல்மெட் போட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இத்துடன், ''குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி.? என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். தன்னைத் தானே கிண்டல் செய்துக் கொள்ளும் மணிமேகலையின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Vj Manimegalai Tv Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment