விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்கா இந்த லாக்டவுனில், கியூட் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் என 3 நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். அதே போல, கலக்கப்போவது யாரு ஜூனியர், சீனியர் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் விஜய் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் வலம் வருகிறார். விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி பிரியங்கா என்றால் அது மிகையல்ல.
பிரியங்காவின் கலகலப்பான பேச்சும் நகைச்சுவையும்தான் அவருடைய பலமாக இருக்கிறது. நிகழ்ச்சியில் நகைச்சுவையாக யார் கேலி, கிண்டல் செய்தாலும் அதை நிகழ்ச்சிக்கான பலமாக மாற்றி பார்வையாளர்களை சிரிக்கவும் ரசிக்கவும் வைப்பவர் பிரியங்கா.
பிரியங்கா விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பு சன் டிவி, ஜீ தமிழ் டிவி ஆகிய தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதலில் துணை தொகுப்பாளினியாக தனது பணியைத் தொடங்கிய பிரியங்கா, இன்று விஜய் டிவியில் பல லட்சக் கணக்கான ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக உள்ளார்.
விஜே பிரியங்கா, பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வெற்றிகரமாக வலம் வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், பழைய எபிசோடுகள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், விஜே பிரியங்காவும் வீட்டில் இருந்து வருகிறார். பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் பிரியங்கா ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். விஜய் டிவி பார்வையாளர்கள் இதுவரை பிரியங்காவை மட்டுமே டிவியில் பார்த்து வந்துள்ளனர். அவருடைய கணவரை பார்த்ததில்லை. இந்த நிலையில், பிரியங்கா போட்டோ ஷூட்டில் கணவர் பிரவீனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.