Vijay TV TRP Rate last week : இந்த கொரோனா நாட்களை அதிகம் சோர்வடையாமல் வைத்திருக்கும் பொறுப்புகளை தமிழ் சேனல்கள் ஏற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும். போதிய அளவு நிகழ்ச்சிகள் இல்லையென்றாலும், கூடுமான வரையில் நமக்கு சிறந்த என்டெர்டெய்ன்மென்ட் நிகழ்வுகளை போட்டி போட்டு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
Advertisment
கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக நிகழ்ச்சிகளின் படபிடிப்பு நடைபெறாமல் இருந்தது. சன்டிவி நிகழ்ச்சிகள் இதனால் பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருந்தாலும், தொடர்ந்து டி.ஆர்.பி. புள்ளிகளில் முன்னிலையில் தான் உள்ளது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக இருந்த மோசமான சூழ்நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அதிக அளவு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது விஜய் டிவி.
இரண்டாம் இடத்தில் இருக்கிறது விஜய் டிவி. நாடகங்கள் போர், திரைப்படங்கள் தான் பெஸ்ட் என்று யோசிக்க வைக்கும் அனைவருக்கும் மிக சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வுகளை வழங்கி வரும் கேடிவி மூன்றாவது இடத்திலும், எந்த மாற்றமும் இல்லாமல் நான்காவது இடத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் டி.ஆர்.பியில் இடம் பிடித்துள்ளன.
தமிழ் நாடு மட்டும் அல்லாமல் தென்னிந்திய அளவிலும், இந்திய அளவிலும் சன் டிவி மற்ற சேனல்களுக்கு கடும் போட்டியாளராக தான் இருக்கிறது. தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது சன் டிவி. இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது சன் டிவி. ஸ்டார்ப்ளஸ் முதல் இடம் வகித்து வருகிறது. தென்னிந்ந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ஸ்டார் மா, இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் விஜய் டிவி, நான்காம் இடத்தில ஜீ தெலுங்கு, 5ம் இடத்தில இடிவி தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களும் தென்னிந்திய டி.ஆர்.பி. பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news