ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தின் டீஸரை, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் ஓவர்டேக் செய்துள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘கபாலி’. ராதிகா ஆப்தே, நாசர், கிஷோர், கலையரசன், தினேஷ், தன்ஷிகா, ஜான் விஜய், ரித்விகா எனப் பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
‘கபாலி’ படத்தின் டீஸர், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கலைப்புலி எஸ்.தாணுவின் யூ ட்யூபில் வெளியிடப்பட்டது. இந்த டீஸரை, இதுவரை (16.11.2017 – மதியம் 1.20 மணி) 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 834 பேர் பார்த்துள்ளனர். இந்த டீஸர்தான், இந்தியாவிலேயே அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட டீஸர் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.
ஆனால், அந்தப் பெருமையை விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் தட்டிச் சென்றுள்ளனர். இந்த டீஸரை இதுவரை 3 கோடியே 46 லட்சத்து 17 ஆயிரத்து 114 பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம், ‘மெர்சல்’ டீஸர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இத்தனைக்கும் இந்த வருடம் செப்டம்பர் 21ஆம் தேதி தான் இந்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய சாதனையை ‘மெர்சல்’ டீஸர் பெற்றுள்ளது.
அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vijays mersal teaser overtake the rajinikanths kabali teaser
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி