Advertisment

சூர்யாவுக்கு வாழ்த்து... யுவனுடன் டான்ஸ்... விருமன் மேடையை கலக்கிய அதிதி ஷங்கர்

வாய்ப்பு வேண்டுமானால் எனது அப்பாவால் கிடைத்திருக்கலாம். ஆனால் அடுத்து எனது வளர்ச்சி எனது கடின உழைப்பினால் இருக்க வேண்டும்

author-image
WebDesk
New Update
சூர்யாவுக்கு வாழ்த்து... யுவனுடன் டான்ஸ்... விருமன் மேடையை கலக்கிய அதிதி ஷங்கர்

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் நடனமாடியது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இவரது இளைய மகள் அதிதி ஷங்கர் முத்தையா கார்த்தி இணைந்துள்ள விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமாகிறார். பிரகாஷ் ராஜ், சரண்யா, ராஜ்கிரன், சூரி, கருணாஸ், ஆர்கே சுரேஷ், மனேஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், வரும் ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், விருமன் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, கார்த்தி, நாயகி அதிதி ஷங்கர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய அதிதி ஷங்கர், சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த படக்குழுவினர், இயக்குநர் முத்தையா. நடிகர் கார்த்தி என அனைவருமே எனனை ஒரு அறிமுக நடிகையாக பார்க்கவில்லை அவர்களின் அனுபவங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் என்னையும் அவர்களின் குடும்ப உறுப்பினர் போல நடத்தியதற்காக சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி. நான் நடிக்க போகிறேன் என்று சொன்னவுடன் மறுப்பு தெரிவிக்காமல் எனது குடும்பத்தினர் எனக்கு ஊக்கம் அளித்தனர்.

இந்த படத்தின் வாய்ப்பு வேண்டுமானால் எனது அப்பாவால் கிடைத்திருக்கலாம். ஆனால் அடுத்து எனது வளர்ச்சி எனது கடின உழைப்பினால் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறிய அவர், விருமன் படத்தின் பாடல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் குத்தாட்டம் போட்டி ரசிகர்கர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment