“விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்” - விஷால் பொங்கல் வாழ்த்து

‘விவசாயத்தை மீட்டெடுத்து, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம்’ என விஷால் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘விவசாயத்தை மீட்டெடுத்து, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம்’ என விஷால் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள விஷால், “விவசாயத்‘தை’ மீட்டெடுத்து, தமிழ் மக்கள் இல்லத்‘தை’ அத்தியாவசியப் பொருட்களால் நிரப்பி, அனைவரது உள்ளத்‘தை’யும் மகிழ்ச்சியாக்கி, நல்ல‘தை’ மட்டுமே வாரி வழங்க வாழ்த்துகள்.

அனைவருக்கும் எனது இனிய பொங்கல், உழவர் திருநாள் வாழ்த்துகள். இனிக்கும் பொங்கலைப் போல தமிழ் மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். விவசாயம் தான் நமது வாழ்வாதாரம். நசிந்துவரும் விவசாயத்தை மீட்டெடுத்து, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்”  எனக் கூறியுள்ளார்.

×Close
×Close