சினிமா... டி.வி... அரசியல்: விஷால் கணக்கு பலிக்குமா?

தொடர்ந்து படம் நடிக்க முடியாச் சூழலில் சின்னத்திரை மூலம் ‘ரீச்’ ஆக விரும்புகிறார். இந்தக் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

நடிகர் விஷால், பரபரப்பு நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர்! படம் வருகிறதோ இல்லையோ, தொடர்ந்து லைம்லைட்டில் இருப்பதாக காட்டிக் கொள்கிறார். இந்த வழக்கத்தை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து செய்துவருகிறார்.

குறிப்பாக நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன்பிருந்தே இந்த யுக்தியை கையாண்டு வருகிறார். சமீபகாலமாக சினிமாவைத் தாண்டி அவர் அரசியல் பரபப்பை உண்டாக்கியதும் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் அவருடன் இருக்கும் நண்பர்கள், ரசிகர்மன்ற பிரமுகர்கள் போன்றவர்களின் நடவடிக்கையையும் செயல்களையும் பார்த்தால் அவர் சினிமாவை ஒரு சேப்டி ஆப்ஷனாக மட்டுமே பயன்படுத்துவதாக தெரிகிறது.

நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்து தயாரிப்பாளர் சங்க தலைவராக தான் ப்ரமோஷன் அடைந்த விஷால், தொடர்ந்து படம் நடிக்க முடியாச் சூழலில் சின்னத்திரை மூலம் ‘ரீச்’ ஆக விரும்புகிறார். சன் டி.வி.யில் அவரது நிகழ்ச்சி இந்த விதம்தான் என்கிறார்கள், விஷாலுக்கு நெருக்கமானவர்கள்!

டிவி பிரியர்களாக இருக்கும் பெண்களிடம் இதில் சுலபமாக சென்றடைய முடியும் என்பதுதான் விஷாலின் கணக்கு! இதன் பின்ணனியில் அரசியல் ஆசை இருக்கிறது. பிக்பாஸ் கமல்ஹாசன் வழியை பின்பற்றுகிறார் விஷால். ஆனால் இந்தக் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

திராவிட ஜீவா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close