Advertisment

விஷாலின் ‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக்... நாளை வெளியாகிறது!

இந்தப் படம், ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் ஃபர்ஸ்ட் லுக், நாளை ரிலீஸாக இருக்கிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
vishal's irumbu thirai

விஷால் நடித்துவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நாளை ரிலீஸாக இருக்கிறது.

மித்ரன் சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம் ‘இரும்புத்திரை’. அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம், ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் ஃபர்ஸ்ட் லுக், நாளை ரிலீஸாக இருக்கிறது. அடுத்த மாதம் இசை வெளீயிட்டு விழா நடைபெற இருக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

Tamil Cinema Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment