Advertisment

Vishwaroopam 2 Box Office: திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த விஸ்வரூபம் 2 ஓபனிங்!

முதல்நாள் சென்னை புறநகர் திரையரங்குகள் காற்றாடின

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vishwaroopam II Tamil Movie Box Office

Vishwaroopam II Tamil Movie Box Office

John Baburaj

Advertisment

Vishwaroopam II Tamil Movie Box Office: கலைஞர் கருணாநிதியின் மரணம், 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட தடைகோரி கடைசி நிமிடத்தில் பிரமிட் சாய்மீரா தொடர்ந்த வழக்கு என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், அறிவித்தபடி ஆகஸ்ட் 10 விஸ்வரூபம் 2 வெளிவருமா என்று சந்தேகம் கொண்டிருந்தனர். அதனால், முதல்நாளில் படம் எதிர்பார்த்ததைவிட குறைவான திரையரங்குகளிலேயே வெளியானது. சில திரையரங்குகளில் 11.30 க்கு பதில் ஒரு மணி, இரண்டு மணிநேரம் தள்ளி வெளியானது.

தமிழ் சினிமாவின் முக்கிய வியாபார மையங்களான மதுரை, தென்ஆற்காடு ஏரியாக்களில் விஸ்வரூபம் 2 வெளியாகவில்லை. படத்தை வெளியிட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன் 'ஐ' படத்தில் மதுரை விநியோகஸ்தருக்கு ஒன்றரை கோடிகள் செட்டில் செய்ய வேண்டி இருந்ததாகவும், அதனை செட்டில் செய்தால் மட்டுமே மதுரை ஏரியாவில் படத்தை வெளியிட முடியும் என்ற நிலையில், மதுரையில் படம் வெளியாகாமல் போனாலும் பரவாயில்லை, பணத்தை செட்டில் செய்யப் போவதில்லை என ரவிச்சந்திரன் முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல் தென்ஆற்காடில் படம் வெளியாகாததற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனை சரிசெய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதனை படிக்கிற நேரம் பிரச்சனைகள் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.

சென்னையில் முதல்நாள் முதல் காட்சிக்கு கூட்டமில்லை. அனேகமான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை. கமல் படத்துக்கு இப்படி நடப்பது இதுவே முதல்முறை. இதற்குமுன் சின்ன பட்ஜெட்டில் வெளியான தூங்கா வனத்துக்கு ரசிகர்களின் ஆதரவு குறைவாக இருந்தது. அது ஆக்க்ஷன் த்ரில்லர் என்ற குறுகிய ஜானரில் பயணித்த படம். ஆனால், விஸ்வரூபம் 2, விஸ்வரூபம் படத்தின் சீக்வெல், பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதற்கு கூட்டம் இல்லை என்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முதல்நாள் சென்னை புறநகர் திரையரங்குகள் காற்றாடின. விமர்சனங்களில் படத்தை புகழ்ந்தாலும் பொழுதுப்போக்கை நம்பி வரும் ரசிர்களுக்கு படம் பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. சென்னை சிட்டியை பொறுத்தவரை படம் ஓரளவு நல்ல வசூலை பெறும். முதல்நாளில் சுமாராக 70 லட்சங்களை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. சனி, ஞாயிறு இந்த வசூல் தொடர்ந்தால் நல்ல ஓபனிங்கை படம் எட்டும். அதற்கடுத்து சுதந்திரத்தின விடுமுறை வருவதால் கூட்டம் சேர வாய்ப்புள்ளது.

பி, சி சென்டர்களில் படத்துக்கு முதல்நாளே பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களில் பாதி ஓபனிங் இல்லை என்று தென்தமிழகத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. வடமாநிலங்களில் விஸ்வரூப் 2 ஓபனிங் மிகவும் குறைவு என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். விஸ்வரூபத்தின் இந்திப் பதிப்பான விஸ்வரூப் முதல்நாளில் 11 கோடிகள் வசூலித்தது, இரண்டாம் பாகம் விஸ்வரூப் 2 முதல்நாளில் இரண்டரை முதல் மூன்று கோடிகள் வசூலித்திருந்தாலே அதிகம் என்கிறார்கள்.

வியாழக்கிழமை நடந்த யுஎஸ் ப்ரீமியர் காட்சிகளில் விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களைவிட மிகக்குறைவாக விஸ்வரூபம் 2 வசூலித்துள்ளது. ப்ரீமியர் காட்சியில் விஸ்வரூபம் 2,57,110 யுஎஸ் டாலர்களையும், உத்தம வில்லன் 81,000 யுஎஸ் டாலர்களையும் வசூலித்திருந்தது. விஸ்வரூபம் 2 நாற்பதாயிரம் டாலர்களுக்கும் குறைவாகவே முன்பதிவு ஆனதாக சம்பந்தப்பட்ட விநியோக தரப்பு கூறியுள்ளது. நிச்சயம் உத்தம வில்லன் ப்ரீமியர் வசூலையே படம் எட்டியிருக்காது என்பது அங்குள்ளவர்களின் கணிப்பு.

ஐந்து மணிநேர ஃபுட்டேஜை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு பாகங்களாக்கி, சிற்சில காட்சிகளை மட்டும் இரண்டாம் பாகத்துக்காக ஷுட் செய்து ஒட்டியதில் கதை, திரைக்கதையின் ஓர்மை சிதைந்து போனதே விஸ்வரூபம் 2 ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதற்கான காரணமாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் 2 சுமாரான வசூலை அடைந்தாலே அது ஆச்சரியமாகப் பார்க்கப்படும் நிலையிலேயே உள்ளது.

Vishwaroopam 2 Sneha Isaimini Tamilyogi Todaypk 123movies Fmovies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment