Advertisment

பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த தல அஜித்.. விஸ்வாசத்தின் உலக வசூல்!

Viswasam Worldwide Box Office Collection: வசூல் ரீதியாக விமர்சனம் செய்பவர்களுக்கு தகுந்த பதில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viswasam box office

viswasam box office

Ajith's Viswasam Worldwide Collection:  பேட்டயா? விஸ்வாசமா? என ஒருபக்கம் மல்லுக்கு நிற்பவர்கள் மத்தியில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூப்பித்து விட்டது விஸ்வாசம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்தது என்ற நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

தல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். உண்மையாகவே தல ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விஸ்வாசமாக அமையுமா? என ஏக்கம் எல்லோரிடமும் இருந்தது. காரணம், நீண்ட இடைவெளிக்கு பின்பு அஜித்தின் திரைப்படம், அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டியாக களத்தில் இறங்கியது.

Ajith's Viswasam Worldwide Collection:  பேட்ட vs  விஸ்வாசம்!

ஒருபக்கம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மாஸ் அண்ட் கிளாசாக எதிர்பார்க்கப்பட்ட பேட்ட திரைப்படம் ரஜினி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. ”இந்த ரஜினியை தான் இத்தனை நாட்கள் திரையில் பார்க்க காத்துக் கொண்டிருந்தோம்” என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஒருபக்கம் காதல் கடிதங்களாக சமூகவலைத்தளங்களில் தீட்ட ஆரம்பித்தனர்.

இன்னொரு பக்கம் தல ரசிகர்கள் ”இதுபோதும்.. இந்த ஒரு படம் போதும் அஜித்துக்கு எப்போதுமே பெயர் சொல்லும் படமாக அமையும்” என்று உணர்ச்சி பதிவுகளை பகிர்ந்துக் கொண்டிருந்தனர். இப்படி விமர்சனங்களாக சென்றுக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களால் சண்டை முட்டியது.

விஸ்வாசம் படம் வெளியான 8 நாட்களிலேயே தமிழகத்தில் 125 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் இடையே சமூகவலைதளத்தில் மோதல் கிளம்பின. இருப்பினும் அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமென்றால் அது விஸ்வாசம் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

வெளிநாட்டிலும் வசூலை அள்ளிய விஸ்வாசம்

இந்த சர்ச்சைகள் பெரிதாக வெடிப்பதை பார்த்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  வசூல் ரீதியாக விமர்சனங்கள் செய்பவர்களுக்கு தகுந்த பதில் ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில், உலகம் முழுவதிலும் விஸ்வாசம் திரைப்படம் இதுவரை ரூ 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாரம் சர்வம் தாளமயம், வந்தா ராஜவாதான் வருவேன், பேரன்பு போன்ற படங்கள் ரிலீஸ் ஆனாலும் பல திரையரங்குகளில் விஸ்வாசம் படம் தொடர்ந்து திரையிடப்பட போவதாக பல திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் வரும் வாரங்களில் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Box Office Viswasam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment