Advertisment

அமேசான் பிரைம்-ல் விஸ்வாசம்... செம்ம காண்டில் இருக்கும் தல ரசிகர்கள்

Viswasam : விஸ்வாசம் படத்தின் 50வது நாளை சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதால், அமேசான் வெளியீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஸ்வாசம்

Ajith's Viswasam In Amazon Prime: விஸ்வாசம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ள அமேசான் வரும் பிப்ரவரி 25ம் தேதி தனது ஆன்லைன் தளத்தில் விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட உள்ளது.

Advertisment

ஆனால், இதற்கு அஜித் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. அஜித்தின் விஸ்வாசம் இன்னமும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் அதனை வெளியிட வேண்டாம் என்றும், வரும் 28ம் தேதி விஸ்வாசம் படத்தின் 50வது நாளை சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதால், அமேசான் வெளியீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் பிளாட்பார்மில் ஹெச்.டி பிரின்டில் ஒரு படம் வெளியானால், உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி தலங்களிலும் அந்த ஹெச்.டி. பிரின்ட் வெளியாகும் என்பதால், 100 நாள் வரை படம் ஓடுவது சிரமமாகி விடும் என அஜித் ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஆனால், எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும், தாங்கள் படத்தை வெளியிடுவதில் அமேசான் தரப்பு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடிய பாடல் வீடியோ ரிலீஸ்

Tamil Cinema Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment